எந்தவித அரசு பதவியிலும் இல்லாத ஒருவர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளானது
இந்த நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு அந்த ஆணையம் கூறியுள்ள பதிலை தற்போது பார்ப்போம்
அரசு மரியாதை வழங்கப்படும் விஷயத்தில் முதல்வர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கலாம். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்க முடிவு செய்து பிப்ரவரி 26-ம் தேதி அதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் மற்றும் மும்பை புறநகர் ஆட்சியருக்குப் பிறப்பித்தார்.
ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் அவர்கள் சார்ந்த துறைக்குச் செய்த சேவைக்காக அரசு மரியாதை பெற தகுதியானவர்கள். அந்த வகையில் 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 40 பேருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, கவிஞர் மங்கேஷ் பத்கோன்கர் போன்றவர்களும் முழு அரசு மரியாதை பெற்றனர்” என்று தெரிவிக்கப்ப



