சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியவை:
தமிழக மக்களின் கோரிக்கை நியாயமானது; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்
*சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி தண்ணீர் தான்
*தமிழக மக்களின் ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான்
*காவிரி , ஸ்டெர்லைட் போராட்டம் இரண்டும் ஒன்றுதான்
*தமிழகம் காவிரிக்காக போராடும் தருணத்தில், ஐபிஎல் விளையாட்டு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்
*காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும்
*ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்
*ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
*காவிரி விவகாரத்தில் அனைத்தும் அரசியல் தான் என்று கர்நாடக தேர்தல் குறித்த கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார்.
*கல்வி விவகாரத்தில் அரசியலை புகுத்தக் கூடாது; இந்த தருணத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமித்திருப்பது தவறு என்று குறிப்பிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
கமல் என்னுடைய எதிரி அல்ல; வறுமை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள், மீனவர்களின் கண்ணீர் தான் என் எதிரி என்று கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
காவிரி விவகாரம் தொடர்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் நடக்கும் மௌன அறவழி போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




