திமுக., ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லோக் ஆயுக்த அமைக்கப்படும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பலரும் தங்கள் எதிர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஊழலின் ஊற்றுக் கண்ணே திமுக., தான்!
விஞ்ஞான ஊழல் பேர்வழிகள்!
ஒரு ஊழலே ஊழலை ஒழிக்கப் போகிறதாமே!
ஊழல்வாதி தனக்குத் தானே ஊழல் விசாரணைக் கமிஷன் வைத்துக் கொள்வது போல் திமுக.,!
– என்று பல விதங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் சமூக ஊடகங்களில்.
இந்நிலையில் பாஜக., தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ள கருத்து இது….
திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்போம்…ஸ்டாலின்..தமிழ்நாட்டின் முதன்முதலில் திமுகஆட்சியில் அமர்ந்தபின்னரே அரசு நிர்வாகத்தில் ஊழல் அரங்கேறியது விஞ்ஞான பூர்வ ஊழல்வாதிகள் என சர்க்காரியாவிடம் சான்றிதழ் வாங்கிய திமுக ஊழலை ஒழிக்கப்போகிறதாம்?
திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக்ஆயுக்தா அமைப்போம்…ஸ்டாலின்..தமிழ்நாட்டின் முதன்முதலில் திமுகஆட்சியில் அமர்ந்தபின்னரே அரசு நிர்வாகத்தில் ஊழல் அரங்கேறியது விஞ்ஞான பூர்வ ஊழல்வாதிகள் என சர்க்காரியாவிடம் சான்றிதழ் வாங்கிய திமுக ஊழலை ஒழிக்கப்போகிறதாம்?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 22, 2018