பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்

Published:

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல்.

arjun - 2026இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், அன்வர் ரஷித் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் , சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆன நடிகை சாய் பல்லவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தியா படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நாக சைதன்யா, சுருதி ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில், இந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதில் நாயகனான அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img