இருட்டு அறையில் முரட்டு குத்து – என்ற திரைப்படம் சமூக ஆர்வலர்கள், சமுதாய நலம் விரும்பிகளின் ஏகோபித்த எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
அவர்களில் ஒருவராக, பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் தன் பங்குக்கு இந்தப் படத்துக்கு தனது முழு எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், தரம் தாழ்ந்த திரைப்படங்களால், தமிழகத்துக்குக் கேடுதான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பாலியல் மலினப் படத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்.
அவரது டிவிட்டர் பதிவில், பெண்மையை இழிவுபடுத்தும் திரைப்படம்… எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டிய மகளிர் அமைப்புகள் மாயமானது ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே ஒரு உரையாடலையும் டிவிட்டர் பதிவில் இணைத்திருக்கிறார். அந்த டிவிட்…
பெண்மையை இழிவுபடுத்தும் திரைப்படம்… எதிர்ப்புக்குரல்
கொடுக்க வேண்டிய மகளிர் அமைப்புகள் மாயமானது ஏன்? pic.twitter.com/RI37MBWv6M— Dr S RAMADOSS (@drramadoss) May 12, 2018




