சேலம் பசுமைவழி சாலைத் திட்டம்: ‘கிறிஸ்துவ பாதிரி’யின் வெறுப்பைத் தூண்டும் பொய்ப் பிரசாரம்!

அடடே... அப்படியா? புகார் பெட்டி

father covai salem road horz - 2026

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்வதில் திட்டமிட்டு கலவரங்களைப் பரப்பி தமிழகத்தில் வன்முறையை வளர்த்து விட்ட கிறிஸ்துவ பாதிரிகளின் அடுத்த இலக்காக, சேலம் – சென்னை பசுமை வழி சாலைத் திட்டம் திகழ்கிறது. இதற்கான வெறுப்புப் பிரசாரங்களை பல வழிகளில் சமூக ஊடகங்கள் வழியே பரப்பி வருகிறார்கள்.

அவற்றில் ஒன்றாக, சென்னை-சேலம் பசுமைவழி சாலை வந்தால் ஆர்.எஸ்.எஸ்.,இன் தமிழ்நாட்டுத் தலைமை இடமாக கோவை மாறும் என மக்களிடம் கலவரத்தைத் தூண்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கிறிஸ்துவ பாதிரி ஒருவர். இவரது வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து டிவிட்டர் பதிவுகளில் எதிர்ப்புக் கருத்துகளும் உலா வருகின்றன.

இந்த பாதிரியின் பின்னணியை விசாரித்து, அவரது நடவடிக்கைகளை காவல் துறை கண்காணிக்க வேண்டும் என்றும், காவல்துறை அவரைத் தடுக்காவிட்டால், மீண்டும் ஒரு தூத்துக்குடி கலவரம் கோவையில் ஏற்பாட வாய்ப்பு உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.