மதுரை என்றாலே போஸ்டர் யுத்தத்தின் பிறப்பிடம் என்று சொல்லலாம். அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தம் இங்கே மிகவும் புகழ்பெற்றது.
தற்போதும் போஸ்டர்கள் நிறைய அடித்து ஒட்டி வருகிறார்கள். திமுக.,வை கைப்பற்றும் விதமாக ஒரு போஸ்டர். திமுக.,வுக்கு பொதுச் செயலாளர் அழகிரி என்று கூறும்படி போஸ்டர்கள்.
சிலர் வேறு விதமாக கலைஞர் திமுக., என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி அதன் தலைவராக அழகிரியை வர்ணித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் இப்போது தமிழகம் முழுதும் பரபரப்பாக ஒட்டப் பட்டு வருகிறது.
கழகம் என்றாலே கலகம் என்றாகிவிட்ட இந்நாளில், கழகத்தை நிலைநாட்ட தொண்டர்கள் விடுத்த அழைப்பு, கலகத்தை நிலைநாட்டும்படியாகத்தான் உள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கும் சமாதிகளுக்கும் அப்படி ஒரு ராசி. அண்ணா சமாதியானார். திமுக., இரண்டாகப் பிரிந்தது. எம்.ஜி.ஆர். சமாதி ஆனார். அதிமுக., இரண்டாகப் பிளந்தது. ஜெயலலிதா சமாதியானார். அதிமுக., மீண்டும் இரண்டாகப் பிரிந்தது. இப்போது கருணாநிதி சமாதி ஆகியிருக்கிறார். அதுவும் அதே அண்ணா சமாதி இருக்கும் பகுதியில்தான்! இப்போதும் திமுக., இரண்டாகப் பிளவுபடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர் செண்டிமெண்டலிஸ்ட்கள்!





