நாட்டை காவி மயமாக்கும் மோடியின் அரசுக்கு எதிராக திமுக., தொண்டர்கள் தயாராக இருக்குமாறு, இன்று கட்சியின் தலைவராக பதவியில் அமரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம்…. என்று கூறியுள்ளார்.
ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்து, சவாலும் விடுத்த ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு…
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம். pic.twitter.com/5q1FqNalYL
— H Raja (@HRajaBJP) August 28, 2018
நான் தயாராகவே உள்ளேன். காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாருங்கள் என்றும் கருப்பு சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை திமுக வெற்றி பெற முடியாது என்று அண்ணண் அழகிரி சொன்னதை மறக்க வேண்டாம் என்றும் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படையாகக் கூறியுள்ளார் ஹெச்.ராஜா.
ஸ்டாலின் பேச்சின் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த பாஜக., -திமுக., கூட்டணி குறித்த சலசலப்பு ஓய்ந்தது என்று தெரிகிறது.





