சென்னை: திராவிடர் கழகத்தை தொடங்கிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140வது பிறந்த நாளான இன்று, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பகுத்தறிவுத் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டிவிட்டரில் கருத்து யுத்தமும் களை கட்டியிருக்கிறது. அதில், கற்சிலைக்கு எதுக்கு கைத்தடியும், கண்ணாடியும். கண்ணாடியால் அந்த கற்சிலை பார்வை பெறப் போகிறதா, அல்லது கைத்தடி இல்லாவிட்டால் சிலை கீழே விழுந்துவிடுமா என்று பகுத்தறிவுடன் கேள்வி எழுப்பியுள்ளார்கள் சிலர்.
தன் மீது மாலை போடுவதைம், செருப்பு வீசுவதையும் சிலைதான் உணருமா? அல்லது ஏற்கெனவே செத்துப் போன அந்த நபருக்குத்தான் தெரியுமா? என்று பகுத்தறவுடன் கேள்வி எழுப்பிகிறார்கள் சிலர். ஈ.வே.ரா., மட்டுமல்ல, திருக்குவளை மு.கருணாநிதியை முன்வைத்தும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
டிவிட்டர் யுத்தத்தில் சில
எங்கள் ஆசான்,
எங்கள் தலைமுறையை சுயமரியாதைகாரனாக மாற்றி,
நான் மானமிகு.சுயமரியாதைகாரன் என நெஞ்சம் நிமிர்த்தி முழங்க வைத்த
அய்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் #HBDPeriyar140 pic.twitter.com/r2N4NbhMHn— தமிழன்பிரசன்னா (@PrasannaTamilan) September 17, 2018
கல்சிலைக்கு கத்தடியும் கண்ணாடியும் அவசியம் தானா ???
கைத்தடி இல்லையென்றால் கீழே விழுந்துவிடுமா கல்சிலை கண்ணாடி இல்லையென்றால் சிலைக்கு கண் தெரியாதா ??
நீங்கள் இப்போது வாழ்த்தியது அந்த கற்சிலைக்கு தெரியுமா ??
எந்த உணர்வுமே இல்லாத கற்சிலைக்கு எதற்காக வாழ்த்து #பகூத்தறிவு— Bhairavi (பாண்டிய நாட்டு இளவரசி) (@Bhairavibhairav) September 17, 2018
தயிர் வடை தின்று
கண்ணாடி போட்டு கொண்டு தினமும் முரசொலி படித்து
மானாடல மயிலாடலன்னாலும் அட்லீஸ்ட் பஜனை கேட்டு
பழங்கள் ஸ்வீட் தின்று
ஹாயாக மெரினால சீடன் படுத்திருக்கும்போது..உங்களுக்கு குருவின் கைத்தடியும் கண்ணாடியும் மட்டும் தவறாக படுகிறதா..
இதை வன்மையாக கண்டிக்கிறேன்..
??? https://t.co/Dpthgumugg— பாரதி கண்ணம்மா… (@vanamadevi) September 17, 2018




