வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

Published:

sabarimala women wall - 2026

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக செய்யும் பொருட்டு கேரள அரசு கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்டுக்கொண்டு அவர்களது வீட்டுப் பெண்களை வலுக்கட்டாயமாக தெருவில் நிறுத்தியது.

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இவர்கள் தாங்கள் எதற்காக நிற்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதுவும் குறிப்பாக தங்களது கணவர் கட்டாயப் படுத்தினார் என்பதற்காக வந்ததாகக் கூறினர்

வனிதா மதில் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ள வந்தீர்கள் உங்களது லட்சியம் என்ன என்று செய்தியாளர் கேட்ட போது அதற்கு பதிலளித்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தனது கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக கூறினார்

வனிதா மதில் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த காரணம் என்ன உங்களது லட்சியம் என்ன என்று மீண்டும் இன்னொரு பெண்ணிடம் செய்தியாளர் கேட்ட போது, கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக அந்தப் பெண் கூறினார்!

சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளிகள் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன. கேரள கம்யூனிஸ அரசு, கண்துடைப்பு நாடகம் நடத்துவது அம்பலமானது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சபரிமலை விவகாரத்தில் அப்படி என்ன ஆசை என்ற கேள்வியை பொதுவில் எழுப்புகிறார்கள் பலரும்!

இருப்பினும், சபரிமலை ஐயப்பனைக் கண்டு தரிசித்து, அவன் அருள் பெறுவதற்காகவே, மத அரசியாலால் ஏமாற்றப்பட்டு இஸ்லாமியராகவும் கிறிஸ்துவராகவும் கம்யூனிஸ்ட்களாகவும் மாற்றப்பட்டுள்ள இப் பெண்கள், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img