பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

Published:

makarasankranthi - 2026

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால், இது அப்படி ஆனதல்ல என்பது தெரியவரும்.

பொங்கல் பண்டிகை நம் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஒரு விழா. தமிழகத்தில் விசேஷமாக ஒரு சிறப்புப் பெயருடன் கொண்டாடப்படுகிறது… அவ்வளவுதான்!

தசரா விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் மேற்கு வங்காளத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்காக அதை மேற்கு வங்க விழா என்று யாரும் கூறுவது இல்லை.

விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக அதை மகாராஷ்டிரா மாநில விழா என்று சொல்வது பொருத்தமற்றது.

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக சிறப்பு அம்சங்களுடன் கொண்டாடப் பட்டாலும், இது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவின் அம்சமே! வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இந்தத் திருநாள் பாரம்பரியமும் பண்பாடும் கொண்ட மக்களால் கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

பஞ்சாப், தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ’லோரி’
அசாமில் ’போஹாலி பிஹு’
பிகார் மற்றும் ஜார்கண்ட் ’சக்ராத்’
மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ’சங்கராந்தி’
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ’உத்தராயன்’
நேபாளத்தில் ’மாகி’, ’மாகே சங்கராந்தி’, ’மாகே சகாராதி’ என்கிற பெயர்களில்
தாய்லாந்தில் ’சொங்க்ரான்’
லாவோஸ் மக்களால் ’பி மா லாவ்’
மியான்மரில் ’திங்க்யான்’ என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இது அறுவடைத் திருநாளின் ஆரம்பம். இங்கே சூரியன் தெய்வம். சூரியன் மகர மாதமாகிய தை மாதத்தில் தன் தேர்க்காலின் போக்கை மாற்றிக் கொள்கிறான். உத்தராயண புண்யகாலம் என்று சிறப்பிடம் பெறுகிறது வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img