தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?

சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi modi - 2026
கோப்பு படம்…

தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பழைய நண்பர்களுடன் பாஜக., கூட்டணி அமையும் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், தமிழகத்தில் ஏற்படப் போகும் மெகா கூட்டணி குறித்து இப்போதே தகவல்கள் பரவலாகி வருகின்றன.

இந்நிலையில், அதிமுக., தலைமையில் தமிழகத்தில் அமையும் கூட்டணியில் பங்குகொள்ளும் கட்சிகள் குறித்து அரசல் புரசலாக கசிந்துள்ள விவரங்கள்

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஆறு சட்டசபை தொகுதிகள்! இந்த ஒதுக்கீடு சட்டசபைத் தேர்தலுக்கு பொருந்தாது என்ற நிபந்தனையின் படி இந்தக் கூட்டணி அமையும். அதன்படி, கட்சிகளுக்கான போட்டியிடக்கூட தொகுதி எண்ணிக்கைகள் இவை… (பாண்டிச்சேரி உட்பட)

கட்சிகளும் தொகுதிகளும் : அதிமுக 20 (மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட 20 தொகுதிகள்)

பாஜகவுக்கு 6,
பாமக., 5 ( வடதமிழகத்தில் கண்டிப்பாக இரண்டு தொகுதி, சேலம் ஒன்று, மற்றவை தலைமை கட்சி விருப்பப்படி)
தேமுதிக 5. (விருத்தாசலம் தொகுதி உட்பட்ட நாடாளுமன்ற தொகுதி, வடதமிழகம்-1 சென்னை-3)
கொங்கு 1 ( ஈரோடு மாவட்டத்தில்)
பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி 1( வடதமிழகம் அல்லது திருச்சியில் ஒரு இடம்)
ரஜினி ரசிகர் மன்றம் 1 ( சுயேட்சை) அல்லது ரஜினியின் விருப்பமான நபருக்கு ஒன்று ( தாமரை சின்னத்தில் பிஜேபி 6+1=7)
புதிய தமிழகம் 1 ( விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அடங்கிய நாடாளுமன்ற தொகுதி அல்லது தென்காசி தொகுதி)

இதில் தென்சென்னை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி ஆகியவை பாஜகவுக்கு அவசியம் கேட்கப்படும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வாட்ஸ் அப் வழியே வைரலாகப் பரவி வருகின்றன

இன்னும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை துவங்கப் படவில்லை என்றபோதும், 18ஆம் தேதி தமிழகத்துக்கான பொறுப்பாளரான பியூஷ் கோயல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையைத் துவங்க உள்ளார் என்பதால், இந்த அனுமானங்கள் இப்போதே பரவி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.