பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி போராட்டம்

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
devendrakulavelalar - 2026

கோவை : பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி, மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர், நான்கு வம்ச பட்டக்காரர்கள்!

அவர்கள் இது குறித்துக் குறிப்பிட்ட போது, பொதுவெளியில் ஒன்றாக உணவு சமைத்து உண்டு உறங்கி எங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறோம்! மேலும் தாரை தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை இந்த நிகழ்வில் இடம்பெற்றன! நான்கு வம்ச பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பண்ணாடிகள் உள்ளிட்ட சிலர் தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசாணையாக அறிவிக்கக் கோரி பல முறை மனு அளித்துள்ளோம்! ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே மாநில அரசு மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளைச் சேர்த்து, நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜன.19, 20 ஆகிய இரு நாட்களாக கோவை தேவேந்திர வேளாளர் வீதி அருள்மிகு மாரியம்மன் கோவில் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

எனவே உடனடியாக தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர்…

இந்தப் போராட்டத்தில் பிரபு பட்டக்காரர், கிருஷ்ணன் பட்டக்காரர், ராதாகிருஷ்ண பட்டக்காரர், மாசிலாமணி பட்டக்காரர் மற்றும் ஊர் பண்ணாடிகள் கலந்து கொண்டுள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.