10% இடஒதுக்கீடு விவகாரம்! திமுக.,வுக்கு நெல்லையில் வலுக்கும் எதிர்ப்பு!

Published:

kanimozhi - 2026

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக.,

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திமுக., எம்பி., கனிமொழி ஆவேசமாகப் பேசி, சமூக நீதி காக்கப் பட வேண்டும் என்றார்.

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல், தகுதி இருந்தும் திறமை இருந்தும், சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்க வைக்க பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, அரசுப் பணிகளுக்கோ, உயர் பதவிகளுக்கோ வர இயலாமல், ஹோட்டல்களிலும், மருந்துக் கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் வேலை செய்து வரும் முற்பட்ட வகுப்பினரை அப்படியே தள்ளுவதுதான் சமூக நீதியா என்று கேட்டு நெல்லை மாவட்டத்தில் திமுக., வை எதிர்த்து போஸ்டர்கள் அடித்து ஒட்டப் பட்டுள்ளன.

சைவம் வளர்ந்த திருநெல்வேலி மண்ணில் நலிந்து வாழும் ஏழை பிள்ளைமார்களுக்கு மோடி தந்த 10% இடஒதுக்கிடை எதிர்க்கும் திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் வன்மையாக கண்டிக்கிறோம்…
நமது வாக்குகளால் வந்த திரு.ALS லெட்சுமணனே ராஜினாமா செய்க!
இவண்
மருந்து கடையிலும் துணிக்கடையிலும்வேலை பார்க்கும்ஏழை பிள்ளைமார் சமுதாயம்

… என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. திமுக.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது உள்ளூர் திமுக.,வினரை கலங்கடித்துள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img