தர்ணாவும் யோகாதான்… காக்காவும் யோகா செய்யும்! நாராயணசாமியை நக்கல் அடித்த கிரண் பேடி!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்

crow yoga - 2026

ஆளுநர் மாளிகை முன்பு கருப்புச் சட்டை அணிந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான், காக்கையும் யோகா ஆசனம் எல்லாம் போடும் என்று கேலியும் கிண்டலுமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கிரண் பேடி.
இன்று காலை கிரன் பேடி தனது டிவிட்டர் பதிவில் ஆசனங்கள் குறித்து இரு பதிவுகள் இட்டிருந்தார். ஒரு பதிவில், காக்கா ஆசனம் என்று தலைப்பிட்டு, காக்காவும் ஆசனம் செய்யும் என்றும், இன்னொரு பதிவில் பூனை ஆசனம் செய்யும் படங்களையும் போட்டிருந்தார். காக்கா ஆசனம் என்ற பெயரில் இரு காக்கைகள் அமர்ந்திருப்பது போல படம் ஒன்றை வெளியிட்ட கிரன் பேடி, அதில் யோகா என்பது சர்வமயம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தர்ணா என்பது யோகா ஆகுமா என செய்தியாளர் ஒருவர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு, தர்ணாவும் யோகாதான் என்றும், என்ன நோக்கத்திற்காக, எந்த ஆசனத்தில் அமர்ந்து, என்ன சத்தம் எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தது அது என்றும் தாம் பதிலளித்ததாக கிரண்பேடி அதில் தெரிவித்திருந்தார்.

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, தாம் பால்கனி வழியே வெளியே பார்த்ததாவும் தினமும் இது போல் புல்தரை விரிப்பின் மீது பூனை யோகாவில் இருக்கிறது என்றும், தாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல யோகா என்பது சர்வமயம் என்றும் பதிவிட்டிருந்தார்.

மேலும், பால்கனிக்கு வந்த காக்கை, முன்னர் பாயை விட்டு நகராத பூனையாக இருந்தது என்று பொருள்படும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார். யோகா, தர்ணா, அண்டங் காக்கை என நாராயணசாமியின் போராட்டத்தை அவர் கிண்டலடிப்பதாகவும், காக்கை என்று அவர் கூறியிருப்பது முன்னர் கருணாநிதி காமராஜரைப் பார்த்து நிறத்தை வைத்து அண்டங்காக்கை என்று மட்டம் தட்டிப் பேசியது போலானது என்றும் சிலர் கருத்துகள் எழுப்பி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.