அண்ணியாரின் ஆவேசம் அத்தியாவசியம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

vijayakanth premalatha - 2026

பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை ஏதோ ஒருமையில் பேசினார் பன்மையில் பேசவில்லை என்று இலக்கணமே தெரியாத கும்பல்கள் கொக்கரிக்கின்றன.

இந்தப் பத்திரிகையாளர்கள் எல்லாம் ஏதோ சுதேசமித்திரனிலும் நவசக்தியிலும் வேலை பார்க்கும் பத்திரிகை தர்மவான்களா ? இப்படி கேள்விகளை அவர்களின் முதலாளிகளாகிய ஸ்டாலினிடனும், பச்சமுத்துவிடமும் கேட்டுள்ளனரா ?

ஏன் புதிய தலைமுறை நிருபர் பச்சமுத்துவிடம் தான் கேட்கட்டுமே! நேற்றுவரை அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு ஒரு சீட்டுக்காக இன்று திமுக கூட்டணிக்கு சென்று இருக்கிறாரே! அது என்ன கொள்கை என்று ?

ஏதோ சந்தையில் கத்துவது போல ஒரு ஒழுங்கும் இல்லாமல் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு கேள்வி கேட்கும் போதே உங்கள் வளர்ப்பு தெரிகிறது. கிஞ்சித்தும் நடுநிலை பேணாத கட்சி சார் ஊடகங்கள் என்ன ஜனநாயகத் தூண்களா?

உங்களை அவர்கள் கையாண்ட விதம் சரிதான் என்பது என் துணிபு .

பிரேமலதாவின் பிரஸ் மீட்டில்  தடுமாற்றமுமில்லை , தயக்கமில்லை தாமே கட்சியை வழிநடத்துபவர் என்கிற முறையில் கேள்விகளை எதிர் கொண்டு பதிலளித்தார். எந்தக் கேள்வியையும் புறம் தள்ளவில்லை.

ஜெயலலிதாவிடம் இத்தகைய பிரஸ் மீட்டே நடந்திருக்காது.

தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு கல்லூரி மாணவிக்குப் பதில் சொல்லாமல் நக்சல் என்றார் மமதா! அப்போ எல்லாம் உங்கள் குரல் உயரவே இல்லையே!

ஏதோ போர்முனைக்குச் சென்று செய்தி சேகரித்து உயிர்த் தியாகம் செய்யும் பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் இல்லை இவர்கள்! அரசியல் கட்சிகளின் ஊடக ஏஜெண்டுகள்.

உங்களிடம் மகளிர் தினத்தன்று நல்லதோர் நிகழ்வாக தரமான சம்பவத்தை நடத்திய அண்ணியார்க்கு மகளிர் தின வாழ்த்துகள் !

  • ராமசேஷன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.