பாரத் மாதா கீ ஜெய்… சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி

rahul treaks tirupati - 2026

குஜராத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேடையில் ‘ பாரதமாதா கீ ஜெய்’ என்று முழங்கியதோடன்றி, இந்திய விடுதலைப் போராட்டதில் அவர்கள் கட்சிதான் இம்முழக்கத்தை ஆரம்பித்ததாக உரிமை வேறு கொண்டாடுகிறார்கள்.

சிரிப்பதா, சினங்கொள்வதா எனப்புரியவில்லை. திரு.மோடி அவர்கள் தமது பேச்சை  ‘ பாரதமாதா கீ ஜெய்’ என்று முடிப்பதும், மக்களும் கூடவே கோஷமிடுவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

காங்கிரஸோ ‘பாரத மாதா’ என்று சொல்லவே தயங்கியது.

நம் தாய்நாட்டை உருவகப்படுத்தி வணங்குவது என்பது ஹிந்து மதத்திற்கே உரிய பண்பாடு. ஆகவே காங்கிரஸ் தயக்கம் காட்டியதில் வியப்பில்லை

. ஒரு முறை ஒரு கூட்டத்தில் காங்கிரஸ்காரர் ஒருவர் ‘பாரத மாதா’ என்று ஆரம்பித்ததுமே அவரைத் தடுத்து நிறுத்தி மற்ற காங்கிரசினர் ‘சோனியா காந்திக்கு ஜே’ என்று சொல்ல வைத்தனர்.

அவர்கள் இன்று ‘பாரத மாதா கீ ஜெய்’ என்னும் கோஷத்திற்கு உரிமை கொண்டாடுகின்றனர்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட காங்கிரஸ் வேறு. இப்போது இருக்கும் காங்கிரஸ் வேறு.

பழைய காங்கிரஸ் -காமராஜ் காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி- புது காங்கிரஸ்  என்று இந்திரா காந்தி துவக்கியது தான் இப்பொழுது உள்ள காங்கிரஸ் கட்சி.

விடுதலைப் போராட்டத்தின் பொழுது இருந்த காங்கிரஸ் தேசிய நலன்களை மட்டுமே மனதில் கொண்ட நேர்மையாளர்களைக் கொண்டது. ஆனால் இந்திரா காந்தி ஆரம்பித்த காங்கிரஸோ ஊழல் மிகுந்த சுயநலக்கட்சி என்பதை அனைவரும் அறிவோம்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு சிலரை சில காலம் ஏமாற்றலாம்‌. பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.

காந்தி பெயரை வைத்துக்கொண்டு ஏமாற்றியது போல  ‘பாரத் மாதா கி ஜெய்’ என்பதை வைத்து மக்களை ஏமாற்ற இனி காங்கிரஸால்  முடியாது.

ஹேமலதா சுகுமாரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.