கட்டிப்புடி கட்டிப்புடிடா… அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அத்துமீறல்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

nagaraj sex scandal - 2026

கூட்டித் துப்புரவு செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் அரசு அதிகாரியின் சில்மிஷ வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!

அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் நடப்பதை விட மோசமாக பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன. உயர் அதிகாரிகள், கீழ் பணியிலிருக்கும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகம் அரங்கேறி வருகின்றன. என்னதான் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், சபலத்தால் நடக்கும் சம்பவங்கள் அதிகம்தான்!

பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்பாதை ஆய்வாளர் நாகராஜ், அந்த அலுவலகத்துக்கு வரும் துப்புரவு பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும்  வீடியோ ஒன்று வாட்ஸ்அப்-ல் வைரலாகி வருகிறது.

அதில் முதலில் அந்தப் பெண்ணின் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப் பிடிக்கிறார். இதனை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார். இவர் சொல்லச் சொல்ல, அந்த ஊழியரும் கொஞ்சம் கூட கூச்சமே இன்றி வீடியோ எடுக்கிறார்.

அப்போது அந்தப் பெண், விடு என்னை.. விடு என்னை.. என்று சொன்னாலும், நாகராஜ் விடவில்லை.! திரும்பத் திரும்ப கட்டிப் பிடிக்கிறார். அப்போது போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா என்று நாகராஜ் சொல்ல, அந்தப் பெண்ணோ போட்டோவும் “வேணாம், ஒரு மயிரும் வேணாம்.. அசிங்கமா கேட்டுடப் போறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

போட்டோ எடுத்தாச்சு என்று அந்த ஊழியர் சொல்லவும், திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து கட்டித் தூக்குகிறார் நாகராஜ்.

இந்த வீடியோவில் இது முதல்முறையாக, நடப்பது போலத் தெரியவில்லை என்றும், இப்படி ஒரு பெண்ணை உரிமையாகக் கட்டிப் பிடிப்பதாகத் தெரியவில்லை. அதேபோல, அந்தப் பெண்ணும் போட்டோ வேண்டாம் என சொல்கிறாரே தவிர கட்டிப்பிடிப்பதை கண்டிக்கவில்லை என்றும் கருத்துகள் உலா வருகின்றன.

இப்படி ஒரு மோசமான சம்பவம் அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– கே.சி.கந்தசாமி

1 thought on “கட்டிப்புடி கட்டிப்புடிடா… அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அத்துமீறல்!”

  1. அநாகரிகமாக அலுவலகத்தில் நடந்துகொண்ட மின்துறை ஊழியர் நாகராஜின் பியூஸைப் பிடுங்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.