திமுக.,வுக்கு மக்கள் வாக்களித்த போதெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறதே.. ஏன்?!

Published:

stalin - 2026

எப்போதெல்லாம் மக்கள் தி மு க விற்கு வாக்களிக்கிறார்களோ அப்போதெல்லாம் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது …

அண்மைக்கால உதாரணங்களே அதற்குப் போதும்.. இது இயற்கையா செயற்கையா என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்… சில உதாரணங்கள்…

2004 — வளர்ச்சியை கொடுத்த வாஜ்பாய்க்கு வாக்களிக்காமல் திமுக. காங்கிரசுக்கு வாக்களித்தனர். அடுத்து இரண்டு வருடம் கடும் தண்ணீர் தட்டுப்பாடு .

2005 இறுதியில் சுனாமி வந்து தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

2006 லிலும் திமுக.,வுக்குத்தான் தமிழகத்தில் வாக்களித்தனர். அப்போது தொடங்கி 2009 வரை கடும் பஞ்சம்! அது மட்டுமா, 2014 வரை மின் தட்டுப்பாட்டில் தமிழகமே  தள்ளாடித் தள்ளாடி… இருளில் மூழ்கியது.

2019இல் திமுக-காங்.க்கு வாக்களித்தனர். தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பமாகி விட்டது. அதற்கு ஏற்றது போல்… இந்த வருடம் மழை 40% குறைவாகத்தான் இருக்கும் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் அடுத்த வருடம் இன்னும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்தத் தட்டுப்பாடு நீங்க வேண்டுமானால்… 2021இல் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்கும் போது, முந்தைய மின் தட்டுப் பாட்டையும், எப்போதெல்லாம் திமுக., வுக்கு வாக்களித்தோமோ அப்போதெல்லாம் ஏற்படும் கடும் நீர்ப் பஞ்சத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்!

– வி.எல். நரசிம்மன் 

Related articles

Recent articles

spot_img