தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில், இன்று அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம், சிறப்பு பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கும்படி, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் செங்கோட்டையன் மழை வேண்டி இன்று காலை சிறப்பு யாகம் நடத்தினார். திருச்சி, ஸ்ரீரங்கம் உறையூரில் நடக்கும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். இதே போல கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடக்கும் யாகத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்றார்.



