நுாதன முறையில் வங்கி ஏடிஎம் கொள்ளை அதிகாரிகள் அதிர்ச்சி; கொள்ளையருக்கு போலீசார வலைவீச்சு…..!

ATM 3 - 2026

பொதுவாக ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையா்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தோ அல்லது பாஸ்வோ்ட்கள் மூலமாகவே கொள்ளை அடிப்பது வழக்கம்.

ஆனால் கொள்ளையா்கள் தற்போது நவீன முறையில் பல்வேறு யுத்திகளை கையாண்டு கொள்ளையடுத்து வருகின்றனா்.

இதையெல்லாம் விட தற்போது ஏடிஎம் இயந்திரத்தையே அப்படியே துாக்கி சென்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் புனே, யவாத் பகுதியில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45க்கு மர்மநபர்கள் சிலர் வந்தனர்.

முதலில் அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற ஸ்பிரே அடித்து மறைத்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டுவந்த கயிற்றின் ஒரு முனையில் ஏ.டி.எம். எந்திரத்தை கட்டினர். மற்றொரு முனையை தாங்கள் வந்த காரில் கட்டினர். இதையடுத்து காரை இயங்க வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை கூண்டோடு பெயர்த்து இழுத்துச்சென்றனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்தநிலையில் கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் வங்கி அதிகாரிகளும் அங்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

அடியோடு பெயர்த்து கொள்ளை அடித்து செல்லப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் வரை இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தோடு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories