சட்டவிரோதமாக பசுக்  கடத்தலில் ஈடுபட்ட  25 பேர் கைது; பொதுமக்கள் பாராட்டு….!

அடடே... அப்படியா? இந்தியா புகார் பெட்டி

 

gows - 2026

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள சன்வாலிகேடா கிராமத்தில் சிலர் பசு மாடுகளை கடத்தி வந்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தனா்.

கடத்தப்பட்ட இந்த பசுக்களை மகாராஷ்ரா மாநிலத்திற்கு அனுப்ப இருந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த அந்தக் கிராமத்தை சோ்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பசுக்களை லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 25 பேரை சுற்றி வளைத்தனா்.

பின்னர் அவா்கள் தப்பி ஓட முடியாதபடி 25 பேரையும் கயிற்றால் கட்டி வரிசையாக நிற்க வைத்தனா்.

அதனை தொடா்ந்து அவா்களை இனிமேல் பசுக்களை திருட மாட்டோம், கடத்த மாட்டோம் என கோஷங்கள் போடவைத்து பின்னர் ஊர்வலமாக கூட்டிச்சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா.

அதனைதொடா்ந்து போலீசார் கடத்தல்காரா்களிடம் விசாரணை நடத்தி அனுமதி இல்லாமல் பசுக்களை கடத்தி அனுப்ப இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனா்.

மேலும் கடத்தல்காரா்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தபட்ட கிராமத்தினா் சிலா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசுக்களை ஏற்றி வந்த 21 லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம்.

பசுக்களையும் மீட்டு கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.