arunvijay 1 - 2026அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்த படம் தடம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரேதான் சினிமா சார்பில் இந்தர்குமார் தயாரித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். அருண் ராஜ் இசை அமைத்திருந்தார்.

இப்படம் மார்ச் மாதம் வெளியானது.அருண் விஜய் இதில்  இரட்டையர்களாக நடித்திருந்தார். ஒருவர் செய்யும், கொலை கொள்ளைகள் அடுத்தவர் மீது விழுவது இப்படத்தின்  கதை. thadam 1 - 2026தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கிஷோர் திருமலை இயக்குகிறார். ராம் பொத்தினேனி அருண் விஜய் கேரக்டரில் நடிக்கிறார். ஸ்மிருதி வெங்கட் கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வித்யா பிரதீப், தான்யா ஹோப் நடித்த கேரக்டர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது.

மெண்டல் மதிலோ, சித்ரலஹரி படங்கள் மூலம் ஏற்கெனவே தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending