1.உப்பை வெடிக்கும் வரை வறுத்த்து தண்ணிர் விட்டு கொதித்ததும் சேனைக்கிழங்கு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும், அரிக்காது.
2.வடை,முறுக்கு பலகாரங்கள் செய்யும் போது எண்ணெயில் கொய்யா இலையை போட்டு வறுத்து விட்டு பின்பு பலகாரம் செய்தால் எண்ணெய் பொங்காது.(i) எலுமிச்சை சாறு 1 சொட்டு பிழிந்தால் எண்ணெயிலுள்ள கசடுகளை நீக்கி விடும்.
3.காரட், பீட்ருட் இரவு முழுவதும் நீரில் போட்டு வைத்து பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் பொலிவாக இருக்கும்
4.உப்புக் கரைத்த நீரில் தக்காளியை போட்டு வைத்தால் அழுகாது.
5.இட்லி மாவு புளித்து விட்டதா அதில் பால் சேர்க்க புளிப்புத் தன்மைக் குறையும்.
6.ஈரத்துணியில் இஞ்சியைச் சுற்றி தினந்தோறும் தண்ணிர் பாத்திரத்தின் மேல் வைத்து வந்தால் 1 வாரம் வரைக் கெடாது.


