வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் தேடி வரும் மான்கள், யானைகள் மற்றும் கரடி உள்ளிட்டவை பெரும்பாலும் இறக்கின்றன. நாய்கள் கடிப்பதால் அதிகப்படியான மான்கள் இறக்கின்றன. மனிதர்களால் கரடிகள் மற்றும் யானைகள் இறக்கின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் மலைப்பகுதியில் இருந்து, அடிவாரத்தில் உள்ள விவசாயப் பகுதிக்கு ஒரு வயது கரடி ஒன்று தண்ணீர் தேடி வந்தது.
அது தேனி-மதுரை நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த வாகனம் ஒன்று கரடியை அடித்து தாக்கியது. இதில் பலத்தக் காயம் அடைந்த கரடி பரிதாபமாக உயிரிழ்ந்தது.
இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.



