காருக்குள் விளையாடிய 2 சிறுவா்கள் பரிதாப சாவு….சிறுமி கவலைக்கிடம்…..!

Published:

dead bady - 2026

புல்தானா மாவட்டம் கவாலிபுரா பகுதியை சேர்ந்த ஆதில் சேக் ஜமீல்(வயது5), ஆசிம் சேக்(3) மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் உள்பட 3 பேரும் விளையாட்டு ஆர்வத்தில் அங்கு பார்க்கிங் பகுதி யில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் ஏறி வியைாடி உள்ளனா்.

சிறிது நேரத்தில் காரில் ஏறிய அவர்களால் கதவை திறந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளனா். இதனால் காருக் குள்ளேயே சிக்கிக்கொண்ட 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

இந்தநிலையில் இரவு வரை வெளியில் விளையாட சென்ற சிறுவர்களை காணாததால் பதறிபோன பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சிறுவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் காருக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த 3 பேரையும் கண்டுபிடித்தனா் பின்னா் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

அங்கு டாக்டர் பரிசோதனையில், சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் 5 வயது சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 சிறுவர்கள் உயிரிழந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img