December 5, 2025, 9:29 PM
26.6 C
Chennai

நேர் கொண்ட பார்வையோடு தன் 2 வது இன்னிங்சை தொடங்கும் திரையரங்கம் !

kesino - 2025சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் கேசினோ தியேட்டர் மறுசீரமைக்கப்பட்டு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காக திறக்கப்படுகிறது. சென்னை அண்ணாசாலைக்கு செல்லும் எவருக்கும் மிக முக்கிய அடயாளங்களில் ஒன்று கேசினா தியேட்டர்.

ரிச்சி தெரு அருகில் புதுப்பேட்டை சாலையின் முனையில் ஓங்கி நிற்கும் அந்த கட்டடம் கடந்த 100 ஆண்டுகால சென்னை வரலாற்றின் சின்னம்.

1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது கேசினோ திரையரங்கம். ஆரம்ப காலத்தில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. இந்த திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்ட படம் ‘டர்ன்டு ஒவுட் நைஸ் அகேய்ன்’ எனும் ஆங்கிலப்படம்.

30களின் ஆரம்பத்தில் சென்னை வந்து, ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் ஐஸ் தொழிற்சாலை வைத்த ஜே.எச்.இராணி தான் இந்த தியேட்டரின் முதல் உரிமையாளர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950களின் மத்தியில் தான் கேசினோ தியேட்டரில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களும் திரையிடப்பட்டன. பிறகு 1971ம் ஆண்டில் இருந்து மீண்டும் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. kesino1 - 2025முதல் பத்து வருடங்களில் ஆங்கிலப் படங்கள் பிரதானமாகத்திரையிடப்பட்டு வந்தன. 50களில் தமிழ்ப் படங்கள் வெளியாக ஆரம்பித்தன. 1971-ல் மீண்டும் ஆங்கிலப் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் 2000 ஆரம்பத்தில், ஐடி துறை வளரத் தொடங்கிய காலத்தில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வருபவர்கள் எண்ணிக்கை அதிகமான சமயம், பிரபல தெலுங்குப் படங்களை கேசினோ திரையிட ஆரம்பித்தது. அன்றிலிருந்து நகரத்தில் இருக்கும் தெலுங்கு மக்களின் விருப்பமான அரங்காக மாறியது.kesino2 - 2025நாட்கள் நகர நகர கேசினோ தியேட்டரில் தமிழ் தவிர்த்து, இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. நாளடைவில் அவ்வப்போது தமிழ் படங்களும் திரையிடப்பட்டன. 2000மாவது ஆண்டிற்கு பிறகு கேசினோ தியேட்டரில் திரைப்பட விழாக்கள் அதிகளவில் நடக்கத் தொடங்கின. 2012-ல், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இந்தத் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது.kesino3 - 2025எஸ்பிஐ சினிமாஸ் கேசினோ திரையரங்கின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர். அவர்கள் ஒப்பந்த காலம் இந்த வருடம் ஆரம்பத்தில் முடிந்தது. தற்போது வேறொரு தரப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் மறு சீரமைப்புப் பணிகள் ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டன.ajith crop - 2025கடந்த 2012ம் ஆண்டு தான் இந்த தியேட்டர் முதன்முதலில் புனரமைக்கப்பட்டது. அப்போதும் கூட தியேட்டரின் உட்புறத்தில் சிதிலமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைத்தார்கள். கடந்த மாதம் வரையில் இந்த தியேட்டரில் மரச்சேர்களே அடுக்காக அமைக்கப்பட்டிருந்தன. எனவே கேசினோ தியேட்டர் கடந்த ஒரு மாதகாலமாக மறுசீரமைப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கேசினோ திரையரங்கை மீண்டும் திறக்கலாம் என்று நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் அஜித் படம் வெளியாவதால், திரையரங்கை முழுக்க துரிதமாக மறுசீரமைத்துவிட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீட்டுடன் மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரலாம் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத்திரையரங்குக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பதால், கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று நிர்வாகம் கூறியுள்ளது. இரவு, பகலாக வேலைகள் நடந்து வருகிறது.nkp 3 - 2025இப்போதும் தியேட்டரின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றப்போவதில்லையாம். உள்ளே தான் மாற்றங்கள் நடக்கின்றன. பார்வையாளர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் மரச்சேர்கள் அனைத்தும் குஷன் சேர்களாக மாற்றப்படுகின்றன. படம் ஓடும் திரையும், ஒலிப்பான் கருவிகளும் நவீன வடிவம் பெறுகின்றன.

ப்ரஜெக்டர், ஒலி அமைப்பு என அனைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்களுக்குத் திருப்திகரமான ஒரு திரையரங்க அனுபவத்தைத் தர விரும்புவதாக கேசினோ அரங்கின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சென்னையின் வரலாற்று சின்னங்களில் ஒன்றான கேசினோ தியேட்டர் புத்துயிர் பெறுவது சினிமா ரசிகனுக்கு மகிழ்ச்சியே.  அதிலும் தற்போது அஜித் படம் அதில் ரிலீசாவதால், தல ரசிகர்கள் சிறப்பான கொண்டாட்டம் செய்ய காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories