மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தத வெச்சி சாகித்ய விருது வாங்கிட்டாரோ?! இவ்ளோ அறிவாளியா இவுரு?!

Published:

suvenkatesantweet1 - 2026

அடேய்.. உன்னையெல்லாம் எம்.பி., ஆக்குனாய்ங்களே… அவிங்களய் சொல்லணும்டா…! என்று குமுறுகிறார்கள் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் குறித்து… சமூக வலைத்தளங்களில்!

என்ன சு.வெ., உம்மை ஏதோ சாகித்ய அகாதமி விருது வாங்கின எழுத்தாளர் என்று நினைத்தேன்… மதுரை ஏற்கெனவே சர்வதேசிய விமான நிலையம்தான்வே… காவல்கோட்டம் அப்போ… மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்து உம்ம பேருல பதிப்பு செஞ்சதா என்று கிண்டல் அடிக்கிறார்கள் அதே டிவிட்டர் பக்கங்களில்.

ஒரு எம்.பி., ஏற்கெனவே தன் தாய் தனக்கு வைத்த சு.வெங்கடேசன் என்று வைத்த பெயரை, மீண்டும் மத்திய அரசு தனக்கு வைத்து, அதை உறுதிப் படுத்த வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது சு.வெங்கடேசனின் இந்த முட்டாள்தனமான பேச்சு என்கிறார்கள்.

ஒருவேளை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலோ, அல்லது போராட்டம் நடத்தப் போவதாகக் கூறி உண்டியல் குலுக்கிய அந்தப் பழன்காலத்தில் போட்ட பிட் நோட்டீஸைப் படித்துவிட்டு, இப்போது மதுரை சர்வதேச விமான நிலையம் ஆக்க வேண்டும் என்று கோருகிறாரா சு.வெ., என்று கலாய்க்கிறார்கள்.

suvenkatesantweet - 2026மதுரை விமான நிலையம், மெட்ரோ அல்லாத 35 விமான நிலையங்களில் ஒன்றானதும், மலேசியாவில் இருந்து நேரடியாக வந்து தரை இறங்கிய விமானங்களுடன் 2012ல் அது சர்வதேச விமான நிலையத்துக்கான அடையாளம் பெற்றதும் வரலாறு. தொடர்ந்து கொழும்பு மற்றும் வளைகுடா நாடான துபைக்கும், சிங்கபூருக்கும் விமானங்கள் இயக்கப் படுவதும் அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். 2013ல் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்று, பின் சர்வதேச சரக்கு முனையமும் ஆனது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

https://www.aai.aero/en/airports/madurai

ஒருவேளை மதுரை விமான நிலையம் என்று எழுதப் பட்டுள்ள தகவல் பலகையை, பெயர்ப் பலகையை மதுரை சர்வதேசிய விமான நிலையம் என்று எழுதச் சொல்கிறாரோ சு.வெங்கடேசன் என்று பார்த்தால்… சென்னை பன்னாட்டு விமானநிலையத்தையும், சென்னை விமான நிலையம் என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். பிறகு எதற்காக, நாடாளுமன்றத்தில், நேரமில்லாத நேரத்தில் (பூஜ்ய நேரம்) பொழப்பத்துப் போய்… பேசக்கூடாத பொய்த் தகவலை… வெட்டித்தனமாகப் பேசி… அவை நேரத்தை வீணடித்து… தனது முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவது போல், தமிழக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மோடி வெறுப்பு முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவானேன்…! என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Madurai airport - 2026காரணம், மதுரை விமானநிலையத்துக்காக சு.வெங்கடேசன் ஒப்பிட்டது, பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியை!

ஆக.. ஆக… இவரது நோக்கம் மோடியின் பெயரை இழுக்க வேண்டும் என்பதுதானே தவிர, ஊருக்கு உருப்படியாக எதுவும் செய்வதற்கான நோக்கம் இல்லை என்பதுதான்!

குறிப்பாக இவர் கொடுக்கும் தகவல்கள் எல்லாம் தவறானவை என்பதை, தொடர்புடைய அமைச்சர் உடனே மறுத்துள்ளார். ஆனால், ஓர் அமைச்சர் அதனை தவறு என்று மறுத்த பிறகும், தான் சொன்னதை மட்டும் டிவிட்டர் பதிவில் வெளியிட்டு, தமிழர்களை மேலும் முட்டாள்களாக்க முயன்றிருக்கிறார் சு.வெங்கடேசன் என்பதை அடித்துச் சொல்லலாம். முயன்றிருக்கிறார் என்பதை விட முட்டாள்களாகவே ஆக்கியிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம், இவரது டிவிட்டர் பதிவினையும் சரிபார்க்காமல், அப்படியே உண்மைத் தகவல் போல் தமிழகத்தின் முன்னணி இதழின் இணையதளத்தில் செய்தி வெளியானதுதான்…

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அந்தச் செய்தியில், சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியதன் தகவலை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்…
அதென்ன சர்வதேசிய விமானநிலையம்… என்று கேட்டால், எழுத்தாளருக்கான சிறப்பு உச்சரிப்போ என்னவோ?! தேசமும் தேசியமும் ஒன்று என்று கூறும் வகையறா போலும்!

வாரணாசி சர்வதேச விமானநிலையத்தை விட மதுரையில் பயணித்தவர்கள் இருமடங்கு அதிகம்: புள்ளிவிவரத்துடன் சு.வெங்கடேசன் கோரிக்கை… என்று வெளியான செய்தி இதுதான்..!

மதுரையை சர்வதேச விமான நிலையமாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) எம்.பி.யான சு.வெங்கடேசன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி சர்வதேச விமான நிலையத்தை விட மதுரையில் பயணித்தவர்கள் அதிகம் எனப் புள்ளிவிவரமும் அளித்தார்.

இது குறித்து மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் சிபிஎம் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை இருபது. அதில் 9 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பயணித்த சர்வதேசப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை விட மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணித்த சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் மதுரை சர்வதேச விமான நிலையம் இல்லை. இது நியாயமா?

பிரதமரின் தொகுதியான உ.பி.யின் வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 1,24,950. இதை விட இருமடங்காக, மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணித்த சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை 2,54,163. வாரணாசியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், மதுரையில் இல்லையா?

திருப்பதி, போர்ட் பிளேயர், இம்பால், விஜயவாடா ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் கடந்த ஆண்டு சர்வதேசப் பயணிகள் ஒருவர் கூட பயணிக்கவில்லை. ஆனால் இவை நான்கும் சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன. இந்த அந்தஸ்து, இரண்டரை லட்சம் மக்கள் பயணித்த மதுரை விமான நிலையத்திற்கு இல்லை.

மதுரை, மற்றும் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக அடிப்படையானது. இது, ஏழு மக்களவைத் தொகுதிவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்குவதாக மாற்றுங்கள். சர்வதேச விமான நிலையமாக அறிவியுங்கள். BASA ஒப்பந்தத்தில் மதுரையை இணைத்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளின் குடியரசுடனான போக்குவரத்துக்கும் வழிசெய்யுங்கள்”. – இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img