மாநிலங்களவையிலும் நிறைவேறியது மோட்டார் வாகனச் சட்டம் 2019..!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

parliament - 2026மோட்டார் வாகன சட்டம் 2019 புதன்கிழமை இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது

இந்தச் சட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்தார். முன்னதாக இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்திருந்தார்!

இந்தச் சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் முன்னர் நிறைவேற்றப்பட்டது! அப்போது, இந்தச் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் சில முக்கியமான திருத்தங்களை கூறியிருந்தன. ஆனால் அவற்றை அரசு ஏற்கவில்லை.

முன்னதாக இன்று மக்களவையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டு அமளி ஏற்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் கஃபே காஃபி அரசர் சித்தார்த்தாவை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மக்களவையில் காங்கிரசார் பெரும் குரல் எழுப்பி கலவரத்தில் இறங்கினர்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அந்தப் பட்டியல்…

motor bill passed - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.