அரசு கேபிள் டிவி கட்டணம் வெகுவாகக் குறைப்பு! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

Published:

edappadi palanisamy2 - 2026
சென்னை : மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவில், ”அரசு கேபிள் டி.வி., கட்டணம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு 10 முதல், 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் மாதக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

cable charges - 2026

தமிழகத்தில் 35.12 லட்சம் இலவச செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு இடைத்தேர்தல் நடைபெற உள்ள வேலுார் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img