கணப்பொழுதில் உயிர் தப்பிய குழந்தை! வைரலாகும் காணொளி

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள்

just escape - 2026சீனாவின் சோங்குய்ங் (Chongqing) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் வசித்து வரும்  பாட்டி ஒருவர், தனது 3 வயது பேரனை வீட்டில் விட்டு விட்டு காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பால்கனியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென அதன் விளிம்புக்கு வந்து  வெளிப்புறமாக சென்றுள்ளான். இதில் நிலைத்தடுமாறிய சிறுவன் பால்கனி விளிம்பை பிடித்தபடி அழுதுகொண்டிருந்தான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு நிலைமையை புரிந்து கொண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், ஒன்று திரண்டு குழந்தையை மீட்க முடிவு எடுத்தனர். அதன்படி வெள்ளை நிற போர்வையை, வலை போல் அவர்கள் பிடித்திருக்க, சிறுவன் கை நழுவி அதில் விழுந்தான். அவனது உயிருக்கு எவ்விதமான ஆபத்தும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

மேலும் சிறுவனின் உடலில் எந்த காயமும் இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். பொதுமக்களின் இந்த அறிவார்ந்த  செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.