தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
புளியை சிறிது அரைத்து அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் க்ழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று காட்சி தரும்.
புளி,பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து குழைத்து கண்களுக்கு கீழே தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த பால் கொண்டு கழுவினால் கண்களுக்கு கிழே உள்ள கருவளையம் மாறும்.