health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பக்கவாதம், கண் எரிச்சல், சொறி, சிரங்கு, படை, காயம், வாதநோய், கண்ணிமை நமைச்சல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பக்கவாதமா?

பக்கவாதத்தில் கை கால் விழுந்து செயல்படாத நிலையில் இருந்தால் 50 கிராம் மிளகைத் தூள் செய்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பக்க வாதத்தால் விழுந்து போன கால், கைகளில் தேய்த்து வர குணமாகும்.

இருமலுக்கு…

வெண்டை விதை ஒரு பிடியளவு எடுத்து ஒரு பழகின சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டுகு காய்ச்சி இந்த நீரை வடித்து பருக இருமல் குணமாகும்.

மஞ்சள் மருத்துவம்

அரிசிமாவுடன் மஞ்சளைக் கலந்து சூடு காட்டி குழைத்து காயம் பட்ட இடத்தில் கட்டி வர ரணம் ஆறும்.

உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை பாலுடன் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

சொறி, சிரங்கு, படை இவற்றின் மேல் வேப்பிலை மஞ்சளும் அரைத்துப் பூசி வர சரியாகும்.

தொடர்ந்தாற்போல் கண் எரிச்சல் இருந்து வந்தால் மஞ்சள் பொடி. கசகசா இரண்டையும் எலுமிச்சைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பிறகு இமைகளின் மேல் பூசிக் கொண்டு தூங்க கண் எரிச்சல் காணாமல் போகும்.

கண்ணிமை நமைச்சல் குணமாக…

நீர் சேர்க்காமல் உருளைக்கிழங்கை நன்கு அரைத்து காலை, மாலை கண்களின் மீது வைத்துக் கட்டி வர கண்ணிமை நமைச்சல் குணமாகும்.

வாத நோய் குணமாக…

இலுப்பைப் பட்டை 35 கிராம் எடுத்து அரை லிட்டர் நீர்விட்டுக் காய்ச்சி பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை ஓர் அவுன்ஸ் சாப்பிட்டு வர எல்லாவிதமான வாத நோய்களும் படிப்படியாக குறைந்து குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.