பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார். அதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அபினவ்வுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் சண்டை இடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது.
குடும்பத்தினர் சமரசத்திற்கு முயற்சித்தும் பலன் இல்லை. இந்நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி காவல்துறையில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.
குடித்து விட்டு கணவர் தன்னையும் மகளையும் அடித்ததாக பிரபல நடிகை புகார் !
Popular Categories



