சுபாஷிதம்: பிறவிக் குணங்கள்!

Published:

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

50. பிறவிக் குணங்கள்!

செய்யுள்:

தாத்ருத்வம் ப்ரிய வக்த்ருத்வம் தீரத்வமுசிதஜ்ஞதா |
அப்யாசேன ந லப்யந்தே சத்வாரஸ்ஸஹஜா குணா: ||

— சாணக்கிய நீதி

பொருள்:

தான குணம், அன்பாகப் பேசுவது, வீரம், சரியான முடிவு எடுத்தல் என்னும் நான்கு குணங்களும் பிறவியிலேயே வர வேண்டியவை. கற்றுக்கொண்டால் வரும் குணங்கள் அல்ல.

விளக்கம்:

சில குணங்கள் நம் டிஎன்ஏ வில் பீஜங்களாக பத்திரமாக இருக்கும். அனுகூலமான சூழலில் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்ளலாம். சரியான நேரம் வராவிட்டால் அவை முளை விடமாட்டா. அத்தகைய குணங்கள் என்ன என்பதை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.

ஒரு விதை முளைக்க வேண்டும் என்றால் அதற்கு அனுகூலமான இடம் வேண்டும். அதற்குத் துணையாக வெப்பநிலை வேண்டும். அதேபோல் மனிதனிடம் பீஜ வடிவில் இருக்கும் சில குணங்கள் வளர்ந்து பெருக வேண்டுமென்றால் நல்ல பண்பாடு அதற்குத் துணை வர வேண்டும். அத்தகைய குணங்கள் யாவை என்று இந்த சுலோகம் காட்டுகிறது.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கொடை குணம்,  பிறர் மனதை நோகச் செய்யாமல்  இனிமையாகப் பேசும் குணம்,  கூற நினைத்தவற்றை தைரியமாகக் கூறுவது, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது…

இந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி தேவி அளித்த பயிற்சியால் சிறுவன் நரேந்திரனின் (விவேகானந்தா) வாழ்க்கையில் இந்த நான்கு குணங்களும் வயதோடுகூட வளர்ந்தன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img