விருதுநகர் மாவட்டம் சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் ரோகினி தம்பதியரின் குழந்தைகள் சுகானா (4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலை பள்ளியில் LKG மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் யோகாவில் மிகுந்த அதிகம் விருப்பம் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீநாகா யோகா சென்டரில் திவ்யபிரபா யோகா மாஸ்டரிடம் யோகா கற்று வருகிறார்.
பின்பு யோகாசனத்தில் இருந்த அதிக ஆர்வத்தினால் சிறுவயதிலேயே யோகாவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதமாக இருவரும் முட்டைமேல் அமர்ந்து ஹனுமனாசனம், மற்றும் விபத்த பட்ஜிமோத்தாசனம் யோகாவில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சாத்தூர் அருகிலுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் சிறுமி சுகானா 120 முட்டை மேல் அமர்ந்து அனுமனாசணம் தொடர்ந்து 30 நிமிடம் செய்தார்.
மேலும் சிறுமி வைரலட்சுமி 30 முட்டை மேல் அமர்ந்து இருகைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக்கொண்டு விபத்த பட்ஜி மோத்தாசனா யோகாவில் தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்
இந்நிகழ்ச்சியில் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சி.இ.ஒ.அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இதற்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.