January 21, 2025, 2:44 AM
24.3 C
Chennai

நீ…. உன்னை அறி! உள்ளம் தெளிவடையும்!

#image_title

சிந்திக்க சில நொடிகள்

–K.G. ராமலிங்கம் ,

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள்….

ஒவ்வொருவரும் அவரவர்களை அறிமுகம் செய்து கண்டு கொண்ட பின்னர் தான் அவரின் திறமையும், புலமையும் வெளிப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் வந்த பாடல் தான் நாம் சிறிய வயதில் பள்ளியில் படித்த பாலபாடம்.

கொழு கொழு கன்றே என் பெயரென்ன?
கன்றின் தாயே என் பெயரென்ன?
தாயை மேய்க்கும் இடையனே என்பெயரென்ன?
இடையன் கையிலிருக்கும் கோலே என் பெயரென்ன?
கோலிருக்கும் மரமே என் பெயரென்ன?
மரத்திலுள்ள கொக்கே என் பெயரென்ன?
கொக்கு வாழும் குளமே என் பெயரென்ன?
குளத்தில் இருக்கும் மீனே என் பெயரென்ன?
மீனைப் பிடிக்கும் வலையனே என் பெயரென்ன?
வலையன் கைச் சட்டியே என் பெயரென்ன?
சட்டி செய்யும் குயவனே என் பெயரென்ன?
குயவன் கை மண்ணே என் பெயரென்ன?
மண்ணில் விளையும் புல்லே என் பெயரென்ன?
புல்லைத் தின்னும் குதிரையே என் பெயரென்ன?
உன் பெயரா….. ஈஈஈஈஈஈஈஈஈ
என்றதாம் குதிரை
பெயரை அறிந்த களிப்பில் பறந்ததால் அந்த ஈ…

ஈக்கு விடம் தலையில் எய்தும் இருந் தேளுக்கு
வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே- நோக்கரிய
பைங்கண ரவுக்குவிடம் பல்லளவே துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம் –

                               - - நீதி வெண்பா

ஈக்கு தலையிலும், தேளுக்குக் கொடுக்கிலும், பாம்புக்குப் பல்லிலும், தீயவர்க்கு உடல் முழுதும் விஷம். மனம் மயக்கும்விஷ வலையில் விழாதீர்கள்….

ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. “மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்.” அந்த ஈயும் தாயின் அறிவுரை கேட்டு பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விழா தொடக்கம்!

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சினை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாயின் பயம் அனாவசியமாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

அந்த ஈ தனக்குள் ஒரு இனம் புரியாத துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல மெல்ல அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று பார்த்தது, அங்கு அந்த ஈ க்கு எந்தவித பிரச்சினையும் தெரியவில்லை அறிவதற்கு அதுக்கு எதுவுமில்லை.

சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடி வர மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்கு தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது.

ALSO READ:  சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா

சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட அந்த ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த பளபளப்பு காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும். அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை.

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த
ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான்.

அந்த அவசியம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அது ஆபத்தானது, அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் அது முன்பே அறிந்து இருந்தது.

ஆனால் அந்த பளபளப்பு, ஓரிரு முறை சென்று வர சென்று வர அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து விட்டது, ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் போன்ற எத்தனையோ வலைகள் வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்றவையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது.

அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்க வில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை.

இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்” என்கிறது திருக்குறள்.

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவைகள் இருக்கின்றன என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்கிறது திருக்குறள்.

கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்.
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்.
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்.
போக- வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல்-தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா!
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?
கவியரசரின் யதார்த்த உண்மை வரிகள் தான் ஞாபகம் வருது……

ஆசை வெட்கமறியாது
அன்பு நிலை அறியாது
பாசம் பண்பறியாது
நேசம் நினைவறியாது…
நீ…. உன்னை…. அறி….. உள்ளம் தெளிவடையும்…….

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...