
கேள்வி:- விநாயக சதுர்த்தியின் போது மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்யவேண்டும்?
பதில்:- எந்த பூஜை செய்தாலும் தடையின்றி நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்று முதலில் சித்தி விநாயகரை வழிபடுவது நம் வழக்கம். உண்மையில் மண் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார் இருவரும் ஒருவரே! ஆனாலும், “நான் செய்யும் இந்த பிரத்தியேகமான விநாயகர் சதுர்த்தி பூஜையை தடையின்றி நடத்தி வை!” என்று வழக்கம் போல் மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டு வணங்குகிறோம்.

இது சம்பிரதாயமான வழிபாட்டு முறை. இந்த மஞ்சளும் கூட நீரில் கரையக்கூடியதே! இதுவும் ஒரு சிறப்பு.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில்- ராஜி ரகுநாதன்.


