December 5, 2025, 6:17 PM
26.7 C
Chennai

“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”

“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”.

(மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம், சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம். இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும், அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான்  நம்மோட மகா பாக்கியம்).(‘பில்வம் வைத்தா  உத்தரகிரியை சம்பவம்)  

.நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு- ஆர்.ஜி.சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகாபெரியவா ஒரு நாள் தினசரி செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உரிய நேரம் கடந்தும் செய்யாம ஏதோ யோசனையில மூழ்கி இருந்தார். அவரைப்  பார்த்தா மோன நிலையில ஏதோ தியானத்துல ஆழ்ந்து இருக்கறவா மாதிரி தெரிஞ்சுது.
மடத்துல உள்ளவாளுக்கே அதுமாதிரியான சூழல் அபூர்வம்கறதால, அவாளும் மகாபெரியவாளோட அந்த மோனத்தவத்துக்கு காரணம் தெரியாம விழிச்சுண்டு இருந்தா.

கொஞ்ச நேரம் கழிச்சு கண்விழிச்ச மகான், மடத்தோட மேனேஜரைக் கூப்பிட்டார்.ரொம்ப காலத்துக்கு முன்னால மடத்தோட தொடர்புல இருந்த ஒருத்தரோட  முகவரியைத் தேடி எடுத்துண்டு வரச்சொன்னார்.

பலகாலத்துக்கு முன்னால மடத்துக்கு கைங்கரியங்கள் செஞ்சவர் என்பதால், குறிப்புநோட்டுகள் பலதையும் தேடி ஒருவழியா அவரோட விலாசத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார், மடத்தோட காரியதரிசி.

அந்த விலாசத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பரமாசார்யா அது சரியான முகவரிதான்கற மாதிரி தலையை அசைத்தார். அப்புறம்,”இந்த விலாசத்துக்கு உடனடியா இவ்வளவு பணத்தை (குறிப்பிட்ட தொகையைச் சொன்னார்) தந்தி மணியார்டர் பண்ணிடு,தாமதிக்காதே,ஒடனே போய் அனுப்பிட்டு வா!” என்று சொன்னார் பரமாசார்யா.

மகாபெரியவா உத்தரவுக்கு மறுப்பு ஏது? உடனே தொகையை எடுத்துண்டு வேகவேகமா போஸ்ட் ஆபீஸுக்குப்போய், குறிப்பிட்ட முகவரிக்கு தந்தி மணியார்டர்ல பணத்தை அனுப்பிட்டு வந்தார்.

நித்ய அனுஷ்டானத்தைக் கூட தள்ளிவைச்சுட்டு பரமாசார்யா அப்படி ஒரு சிந்தனையில ஆழ்ந்து இருந்தது ஏன்? பலகாலம் முன்னால கைங்கரியம் பண்ணின ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுக்கச் சொல்லி அந்த விலாசத்துக்கு பணம் அனுப்பச் சொன்னது ஏன்? இதெல்லாம் யாருக்கும் புரியலை!.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் ஸ்ரீமடத்துக்கு ஒரு கடுதாசி வந்தது.

“ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். போனவாரம் என்னோட தகப்பனார் சிவபதம் அடைஞ்சுட்டார். அவரோட தேகத்துக்கு உரிய உத்தரகிரியைகளைப் பண்ணறதுக்கான செலவுக்கு பணம் இல்லாம ரொம்பவே அல்லாடிண்டு இருந்தேன்.
கடைசி நிமிஷம் வரைக்கும், ‘எனக்கு எது நடந்தாலும் பயப்படாதே.எப்பவும் மகாபெரியவாளையே நினைச்சுண்டு இரு. எல்லாத்துக்கும் வழிகாட்ட அந்த மகான் இருக்கார்!’ அப்படின்னுதான் சொல்லிண்டு இருந்தார்-என் தந்தை.
தந்தையார் தவறிப்போன துக்கத்தைவிட அவருக்கான உத்தரகிரியையைச் செய்யறதுக்கு உரிய பணம்  இல்லையேங்கற துக்கம் எனக்கு அதிகரிச்சுண்டே இருந்த சமயத்துல, ஸ்ரீமடத்துலேர்ந்து பெரியவா உத்தரவுப்படி அனுப்பப்பட்டதா ஒரு தொகை தந்தி மணியார்டர்ல வந்தது.

அந்தப் பணம் இங்கே இருக்கற சாஸ்திரிகள் உத்தரகிரியைப் பண்ணறதுக்குக் கேட்ட தொகை எவ்வளவோ அதுக்கு  ரொம்ப சரியா இருந்தது. மகா பெரியவாளுக்கு  என்னோட சாஷ்டாங்க நமஸ்காரம்!”

அப்படின்னு எழுதி இருந்தது அந்தக் கடிதத்துல. அதைப் படிச்சதும்தான் எல்லாருக்கும் விஷயம் புரிஞ்சுது.

ஆனா, யாருக்குமே புரியாதது என்ன தெரியுமா?

மகாபெரியவா தினமும் செய்யற சந்த்ரமௌளீஸ்வர  பூஜைக்கு பல வருஷங்களுக்கு முன்னால தினமும் வில்வம் பறிச்சுண்டு வந்து தர்ற கைங்கரியத்தைப் பண்ணிண்டு இருந்தவர் அந்தத் தொண்டர் ‘பில்வம் வைத்தா’ன்னே பெரியவா அவரைக் கூப்பிடுவார்.
அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோட கொல்கத்தாவுக்குப் போய் அங்கேயே தங்கிட்டார்.அவர் இங்கேர்ந்து போறச்சே சொல்லிவிட்டுப் போன முகவரியைத்தான் மடத்துல குறிச்சு வைச்சிருந்தா.

1) பலகாலத்துக்கு முன்னால தொண்டு செஞ்ச அந்த பக்தர் இறுதிக்காலத்தை அடைஞ்சுட்டார்னு கிட்டத்தட்ட ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற இடத்துலேர்ந்து இங்கே இருக்கிற மகானுக்குத் தெரிஞ்சது எப்படி?

2) அந்தத் தொண்டரோட உத்திரகிரியைக்குத் தேவையான பணம் இல்லாம அவரோட வாரிசு கஷ்டப்படறதை மகாபெரியவா எப்படித் தெரிஞ்சுண்டார்.?

3)இதையெல்லாம் விடப் பேரதிசயம், அங்கே சாஸ்திரிகள் கேட்ட தொகைக்கு கொஞ்சமும் கூடவோ, குறைச்சோ இல்லாம சரியான தொகையை அனுப்பச் சொன்னது எப்படி?

மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம்,சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம்.இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும்,அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான் நம்மோட மகா பாக்கியம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories