இலத்தூர் கோயிலில் உழவாரப் பணி!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
uzhavarapani - 2026

தென்காசி மாவட்டம், இலத்தூர் அறம்வளர்த்தநாயகி சமேத மதுநாதர் ஸ்வாமி திருக்கோயில் உழவாரப்பணி 8வது மாதமாக நடைபெற்றது.

இந்து சமய நற்பணி மன்றம், இந்து மகாஜனங்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து நடத்தும் இந்த உழவாரப்பணி கடந்த ஞாயிற்றுக் கிழமை டிச.29 அன்று நடைபெற்றது.

இந்த உழவாரப் பணியில் சந்திரன் (இரானுவம் ஓய்வு), ஆத்மநாதன், ஜோதிடர் காளிராஜன், குட்டித்துரை, சுப்பையா, மாரியப்பன், கணபதி முதலியார், சுப்பிரமணியன், மாடசாமி, புன்னைவனம், ராதாகிருஷ்ணன், பிரம்மநாயகம், சண்முகராசு, வெயிலுமுத்து சிவா, முத்துக்குமார், ஆறுமுகத்தம்மாள், பழனிமுத்து, சண்முகவேல், மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் சிவசுப்பிபிரமணியன் பட்டர் இணைந்து ஏற்பாடுகளைச் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.