
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அங்கு இன்று காலை சரமாரியாக நடந்த சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை அங்கு நடந்தது .
அங்கு இன்று காலை சரமாரியாக நடந்த சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அங்கிருந்து காட்டு பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் வீரர்கள் முயன்று உள்ளனர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அதை முறியடித்தது.
தற்போது அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இன்றுதான் எஸ்எம்எஸ் சர்வீஸ் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நேற்றுதான் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.
அதேபோல் ராணுவ தளபதியாக முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில்தான் இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



