எந்த சூழலிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார்! தளபதி மனோஜ் முகுந்த்!

சற்றுமுன்
miltry - 2026

மனித உரிமைளை மதிக்க , இந்திய ராணுவம் சிறப்பு கவனம் செலுத்துவோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளபதியாக நேற்று(2019 டிச.,31) பொறுப்பேற்று கொண்ட மனோஜ் முகுந்த், டில்லியில் உள்ள, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணுவ தளபதியாக எனது கடமையை செய்ய தைரியத்தையும், பலத்தையும் வழங்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.

அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து சூழ்நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்போம். மனித உரிமைளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம். இவ்வாறு மனோஜ் முகுந்த் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.