திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam nataraja - 2026

இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

courtallam nataraja1 - 2026
திருக்குற்றாலம் கோயிலில்

நடராஜப் பெருமான் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான தென்காசி மாவட்டம், திருக்குற்றாலம், திருக்குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு சிவபெருமான் திருநடம் புரிந்த பஞ்ச சபைகளில் சித்திர வடிவில் திகழும் சித்திர சபை மற்றும் குற்றாலம் கோயிலில் உள்ள நடராஜருக்கு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராசப் பெருமானை தரிசனம் செய்தனர்.

sengottai nataraja - 2026
செங்கோட்டை ஸ்ரீகுலசேகரநாத ஸ்வாமி ஆலயத்தில்…

திருக்குற்றாலம் அருகில் உள்ள செங்கோட்டை ஸ்ரீ குலசேகரநாதர் அறம் வளர்த்த நாயகி திருக்கோயிலில் இன்று காலை ஆருத்ரா தரிசன சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.