பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?

பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?

(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)

(மைகாட்…! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!” என்று சொல்லி பெரியவாள் உரையின்   நயத்தை ரசித்த ஆங்கிலேய மாணவர்கள்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாமறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கல்வித்துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த  அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருவார்.

இந்தத் தடவை, இரண்டு ஆங்கிலேய மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து மாணவர்கள், தன்னை நாடி வந்திருக்கிறார்கள் என்பதால், உள்ளூர ஒரு பெருமிதம்.

தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று அகந்தை.

“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.. இங்கிலீஷ்காரர்களே  ரொம்ப புத்திசாலிகள்!  இவர்கள் இரண்டுபேரும், ரொம்ப ரொம்ப இண்டலிஜெண்ட்..! பி.எச்.டி. வாங்கியிருக்கிறார்கள். இங்கிலீஷில் தான், வருஷந்தோறும் புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல், ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”

அன்பரின் ஆங்கிலத் தோத்திரம் முடிவடைவதாக இல்லை.

மகாப் பெரியவாள் முன்னிலையில் பேசும்போது, ஓர் அடக்கம் வேண்டும். ஆங்கிலத்தைப் புகழ்வதில் தவறு இல்லை. ஆனால், தலைகால் தெரியாமல், சொற்களைக் குவித்துக்கொண்டே போகக்கூடாது.

அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம், பேச்சை நிறுத்தியபோது, பெரியவாள் பேசத் தொடங்கினார்கள்

“ஆமாம்….இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலிதான்! . நாம், பாலைத் தயிராக மாற்றுகிறோம்.அது ஸ்வபாவ மாறுதல். ஆனால்,தயிரைப் பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது. அதனாலே,அக்ஞானிகளான நாம் அந்தமாதிரியெல்லாம் முயற்சி பண்றதில்லே. இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ!….’இதோ, நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்’னான். Butter Milkன்னு  ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சுட்டான் ! பார்த்தியா..எவ்வளவு சுலபமா, Butter-ஐ மில்க் ஆக்கிவிட்டான்.!. நாம் என்னவோ அதை மோர் என்று சொல்கிறோம்.மில்க்ன்னு சொல்றதில்லே…”

அருகில் இருந்தவர்கள், மென்மையாகச் சிரித்தார்கள்.

ஆங்கிலேய மாணவர்கள்,’பெரியவாள் என்ன சொன்னார்கள்’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

” மை காட் !  இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச் !” என்று சொல்லி, பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.

கல்வி அதிகாரியின் முகத்தில், வெண்ணெய் – இல்லை – விளக்கெண்ணெய் வழிந்தது !.

Support us! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when readers and people like you to start contributing towards the same. Please consider supporting us to run this web team for our 'Hindu Dharma'.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
0FollowersFollow
1,974FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-