கொல்ல வரும் கொடுமையினை நீக்கும் குலதெய்வ வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் விழாக்கள் விசேஷங்கள்
murugar 1 3 - 2026

இறை சக்தி ஒன்றே ஆனால் மனிதன் பல்வேறு குறைபாடுகளை தீர்க்க அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களை தாங்கி மக்களுக்கு நல்வழி காட்டுகிறது ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்கினாலும் அம்மனிதன் சார்ந்தவன் குடும்பத்திற்கு என்று ஒரு குலதெய்வம் உண்டு பாரம்பரியமாக பல ஆயிரம் குடும்பங்களுக்கு வம்சம் வம்சமாக இந்த குலதெய்வம் அமைகிறது

மூதாதையர்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து அதற்காக இறைவன் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் கிராமங்களில் கிராம தேவதைகளாகவும் தெய்வங்களாகவும் ஆன்மீக நிலையில் உயர்வடைய செய்து பூலோகத்திற்கு அனுப்புகிறான் அவர்களுக்கு இத்தகைய தேவதைகளாக பல்லாயிரம் ஆண்டுகள் அருள்புரிகின்றனர்

sastha 1 - 2026

காற்று நீர் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் இதுபற்றி தத்துவமாக நமக்குரிய கிராமத்து பூமியைக் குறிக்கும் பூமா தேவியாக நம்மில் இருந்து காப்பவரே குலதெய்வங்கள் தான் உதித்த பூமியில் அக்னி ஏற்றி பொங்கல் படையலிட்டு தனக்கு காணிக்கையாக்கி அதை ஊர் மக்களுக்கு வழங்கும் போது குலதெய்வங்கள் ஆனந்தத்துடன் அருள்பாலிக்கின்றனர்

ஒவ்வொருவரும் அவரவர் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் அனுசரித்து பிரார்த்தனைகளை நிறைவேற்றி வழிபடவேண்டும் இவர்களே தேவதைகளாகவும் தெய்வங்களாகவும் தெய்வாம்சம் பொருந்திய ரிஷிகளாகவும் பல நிலைகளை பெறுகின்றனர் குலதெய்வ வழிபாடே தேவ ரிஷி மற்றும் பித்ரு கடன் ஆகிய 3 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்கிறது

perumal 1 - 2026

ஒவ்வொரு மனிதனும் ஹோமங்கள் யாகங்கள் வடிவில் தேவர்களுக்கும் நித்திய வழிபாடுகள் பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் அதற்கான கடமைகளைச் செய்தல் வேண்டும் இவையே தேவ ரிஷி பித்ரு கடன்களை ஒருத்தன் குலதெய்வத்திற்கு பொங்கல் படைக்க ஏற்று அவர்களுக்கு உரித்தான ஹோமம் ஆகும் அது தேவகடனை பூர்த்தி செய்யும்

குலதெய்வத்திற்கு செய்யும் அபிஷேக ஆராதனைகள் ரிஷி கடனை நிவர்த்தி செய்யும் முறையாகவும் படைத்த பொங்கலை அன்னதானமாக மக்களுக்கு வழங்கும் போது அவர்கள் வடிவில் நம் முன்னோர்கள் ஏற்றுக்கொள்வதால் பித்ரு கடன் நிவர்த்தி ஆகிறது இத்தலத்தில் வழிபட்டால் வாழ்க்கையில் பெரும் சுமை குறைந்து இறைவனின் அருளால் நலமுடன் வாழலாம்
குலதெய்வ வழிபாட்டை ஒருவரும் அவசியம் வருடத்திற்கு ஒரு முறையேனும் செய்ய வேண்டும் சில குடும்பங்களுக்கு பித்ரு தேவதைகளும் கிராம தேவதைகளின் குலதெய்வமாக அமைவதுண்டு

krishnan 1 - 2026

உதாரணமாக அய்யனார் கருப்பசாமி வீரபத்திர ஸ்வாமி எல்லையம்மன் போன்று குலதெய்வங்கள் சில குடும்பங்களுக்கு சமயபுரம் மாரியம்மன் திருப்பதி வெங்கடாஜலபதி முருகப்பெருமான் போன்ற தெய்வ அவதாரம் மூர்த்திகளை குலதெய்வங்களாக அமைவது உண்டு எனவே குலதெய்வம் மூர்த்தி என்ற பாகுபாடு கொள்ளாது ஆழ்வார்கள் பாடியது போல் ஆண்டவன் சேவையில் அவனடியார் சேவை உயர்ந்தது என்பதை புரிந்து குலதெய்வ வழிபாடு செய்து குலதெய்வத்தின் அருளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்

ayanar - 2026

பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரத்தில் குலதெய்வத்தை வழிபடுவது 100% அதன் பலனைப் பெற்றுத்தரும்

பங்குனி உத்திரத் திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் கஷ்டங்களை குறைப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும் தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்

குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள் துயரங்கள் இடையூறுகளைத் இருந்து காக்கப்படும் குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையிலும் பொருத்தது காடு மலை வயல்வெளி சாலை வசதி இல்லாத இடங்களில் இருக்கும் அதனால் எப்பொழுதும் சென்று வர முடியாது

irukkankudi mariamman - 2026

வருடம்தோறும் இரண்டு முறை அது அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நல்லது கிராமங்களில் இருந்து வெளியேறி நகரப் பகுதிகளில் குடியேறியவர்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை பங்குனி உத்திரத் திருநாளில் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்

அப்படி போக முடியாத சமயத்தில் வீட்டில் இருந்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம் பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வத்தை வழிபாடு செய்து எல்லா வகையான பேற்றினையும் பெற்று நோய் நொடியின்றி குலத்தெய்வத்தின் அருளினை எல்லாருமே பெறுவோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.