
ஒரு பக்தருக்கு விசா பெறுவதற்கு அவர் ஸ்ரீ மகாசன்னிதானத்தை மானசீகமாக வேண்டி குருவின் மந்திரத்தை ஜெபித்து அனுகூலம் பெற்றதை இச்சம்பவம் உரைக்கிறது
எச்.எச். ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசன்னிதானத்தின் தீவிர பக்தர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2010 இல், அவரது நிறுவனம் மாநிலங்களில் பணியாற்ற எச் 1 பி விசாவிற்கு விண்ணப்பித்தார். சில காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டது.
அந்த பக்தர் அந்த வாய்ப்பை இழந்ததால் மிகவும் வருத்தப்பட்டார். விசா செயல்முறையை ஒரு முறை மட்டுமே தொடங்குவதே நிறுவனத்தின் இயல்பான நடைமுறையாக இருந்தது, இப்போது இந்த முடிவுடன் அவர் தனது எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவர் நமது சத்குருவைப் பற்றி நினைத்து “ஸ்ரீ குரோ பஹிமாம் …” என்று கோஷமிடத் தொடங்கினார். பக்தரின் மானசீக வேண்டுதல் மட்டும் ஜெபித்தலின் காரணமாக அவரது முதலாளி அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவருக்கான விசா செயல்முறையைத் தொடங்கினார். அந்த பக்தரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போயிற்று அன்றிலிருந்து அவர் அனுதினமும் ஸ்ரீ குரு மந்திரம் அவரது அன்றாட ஜெபமாக மாறியது.
ஸ்ரீகுரோ பாஹிமாம் பரமதயாளோ ரக்ஷமாம் ஸ்ரீசிருங்கேரி ஜகத்குரு பாஹிமாம் ஸ்ரீபாரதீ தீர்த்த ரக்ஷமாம் ஸ்ரீவிதுசேகர பாரதீ ரக்ஷமாம்.