
ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் அவர்கள் தர்மத்தினை கடைப்பிடிப்பதில் அவசியத்தை உபதேசிக்கிறார்கள்
எல்லா இடங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரண்டு விதம் இருக்கிறார்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று எப்படி தீர்மானம் பண்ணுவது என்று கேட்டால் யாருக்கு தர்மத்தில் விசுவாசம் இருக்கிறதோ யாருக்கு கடவுள் விஷயத்தில் விசுவாசம் இருக்கிறதோ யார் மற்றவர்களுக்கு உபத்திரவம் செய்யமாட்டார்களோ, அவர்கள் நல்லவர்கள்.
அது இல்லை என்று சொன்னால் கெட்டவர்கள் எல்லோருக்கும் நாம் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அது போல் நடக்குமா என்று தெரியவில்லை தர்மத்தில் விசுவாசம் வேண்டும் விசுவாசம் வேண்டும் என்றால் எப்படி தெரியும் நாம் தர்மத்தை ஆசரனம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு தர்மத்தில் விசுவாசம் இருக்கிறது.
நாம் தினமும் பகவானை பூஜிக்கிறோம் என்று சொன்னால் நமக்கு பகவானிடத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம் இந்த தர்மத்தை அனுஷ்டிக்கவே நம்முடைய ஜென்மத்தை சாதகம் ஆக்கினார். நாங்கள் எப்பொழுதும் நல்லதே பண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் எங்களுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது எதற்காக தர்மம் செய்ய வேண்டும்.

நாங்கள் தர்மம் பண்ணினால் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமல்லவா கஷ்டம் வரும்பொழுது நாங்கள் எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்பவர்கள் உண்டு. நீ இப்பொழுது அனுபவிக்கக்கூடிய சுகமும் துக்கமும் ஜென்மாந்திர கர்மத்தின் உடைய பலனால் நடக்கிறது.
அப்பொழுது நிறைய தப்பு செய்திருப்போம் அதற்கான பலனை அனுபவிக்கிறோம். இப்போது திரும்பவும் தப்பு செய்து கொண்டு இருந்தோமேயானால் நமக்கு என்ன விவேகம் இருக்கிறது முட்டாள்தனம்
ராமாயணத்தில் லட்சுமணன் ராமரிடம் கேட்கிறார் நீ பெரிய தார்மீகன் தர்மத்துக்கு கட்டுப்பட்டவன் ஆனால் நீ கஷ்டங்களை அனுபவிக்கிறாய் ராவணன் சௌக்கியமாக இருக்கிறான் அவன் ஒரு அதர்மன். எனக்கு ஒன்றுமே புரியலை என்று சொன்னாராம்.
நாம் முன்பு செய்தவற்றிற்காக வேண்டி துன்பம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல் இப்போது செய்வதற்கு அவன் ஒருநாள் கண்டிப்பாக அனுபவிப்பான் என்று சொன்னாராம் ராமர்.
தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும் அதனால் என்ன பயன் என்று அதிலிருந்து பயனை நாம் எதிர்பார்க்கக் கூடாது. ரொம்ப அதிகமாக தவறு செய்து விட்டோமேயானால் அதனுடைய பலனை உடனே அனுபவிக்க வேண்டி வரும்.
நாம் ஒரு காரியத்தின் பலனை உடனே எதிர்பார்ப்பது நியாயமா? இப்போது செய்தால் அடுத்த ஜென்மத்தில் பாவம் என்பது இருக்கிறது என்று சொன்னால் நாம் தர்மத்தை ஆசரனம் பண்ணி அந்த பாவத்தை கரைக்க வேண்டும்.

தர்மத்தை எவ்வளவு செய்தாலும் அவ்வளவு பலமாக இருந்தால்தான் பலிதமாகும் 10 பேர் பிரபலமாக பேச வேண்டும் என்பதற்காக செய்வது தர்மம் அல்ல உன்னுடைய கர்த்தவ்யம் என்கிற தீவிர முயற்சியோடு செய்தால் அது பயனளிக்கும்.
10 ரூபாய் கொடுத்து விட்டு அவர்கள் நம்மைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் சாஸ்திரத்தில் ஒரு வசனம் இருக்கிறது நாம் செய்த நல்ல காரியத்தை பற்றி நாம் செய்தோம் என்று பேசி தற்புகழ்ச்சி செய்தோமேயானால் அதற்கான புண்ணியம் அனைத்தும் போய்விடும்.
அதனால் தான் தர்மம் செய்யும்போது பரிபூரணமான மனதுடன் பரிபூரணமான சிரத்தையுடனும் செய்யவேண்டும் பகவான் இருக்கிறான் என்று சொல்லும் போது சிரத்தைக்கு ரொம்ப முக்கியத்துவம் வேண்டும் நீங்கள் ச்ரத்தை இல்லாமல் எதை செய்தாலும் அது பலிக்காது.
பகவானிடம் ச்ரத்தை ரொம்ப முக்கியம் சாஸ்திரத்திலும் குருவினுடைய வசனத்திலும் பலமான நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அப்படி என்றால் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதர்மத்தை செய்யக்கூடாது. இந்த தவறான தர்மத்துக்கு புறம்பான காரியத்தை செய்து விட்டு அதனால் யாருக்கு தெரியப் போகிறது என்று நாம் நினைக்கிறோம்.

நம்முடைய இருதயத்திலே பரமாத்மா இருக்கிறான் பகவத் கீதையில் எல்லா இடத்திலும் நான் இருக்கிறேன் என்று ஈஸ்வரன் எழுதியிருக்கிறார். நாம் பாவத்தை செய்கிறோம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம் இதயத்தில் இருக்கும் ஈசுவரனுக்கு தெரியும்.
அதனால் அவன் இருக்கிறான் என்று நாம் நினைப்பது உண்மையானால் தப்புக் காரியம் செய்ய மாட்டோம் எப்போதும் தர்மத்தையே சிந்தைப்போம். அதர்மத்தை பற்றிய எண்ணமே கூடாது இது இரண்டும் மனுஷனுக்கு இருக்கிறது என்று சொன்னால் அவன் தன்னுடைய வாழ்க்கையை பவித்திரமாக முடியும் ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கு தர்மம் செய்ய வேண்டும் அதர்மம் செய்யக்கூடாது இந்த இரண்டும்தான் வேண்டும்
இப்படிப்பட்ட ஜீவனம் பவித்திரமான ஜீவனமாக அமைகிறது பவித்ரமான நடத்த வேண்டுமென நினைப்பவர்கள் தானாகவே தர்மத்தில் இருப்போம் ஆதர்மமாக இருக்க மாட்டோம் என்று எண்ணுவான்.
சந்தியாவந்தனம் பண்ணுவதில்லை. எனக்கு முன்னாடி அதில் ருசி இருந்தது. இப்பொழுது இல்லை இந்த மாதிரி பேச்சுக்களை பேசக்கூடாது
நம்முடைய ருசியையும் நம்முடைய மனதையும் அனுசரித்து தர்மம் இல்லை தர்மத்தை செய்ய வேண்டும் என்பதுதான் சாஸ்திரமே தவிர உன் மனதிற்கு எப்படி இருக்கிறது அப்படி செய் என்பது சாஸ்திரம் இல்லை
முதலில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் இப்போது சாப்பிடுவதில்லை என்று யாருமே சொல்வதில்லை அதற்கு மட்டும் மனசு கடைசிவரை இருக்கிறது ஆனால் சந்தியாவந்தனம் செய்ய மட்டும் அப்போது இருந்தது இப்போது இல்லை என்கிற பதில் வருகிறது.
இப்படிப்பட்ட பதில்கள் எல்லாம் வரவே கூடாது சாஸ்திரத்தில் இன்னொரு வாக்கியம் சொல்வார்கள் யாவவாதி ப்ரவீ வந்த்யாதேவாந்தேவிவித்ய: என்னுடைய கடைசி நிமிடம் வரை குருவையும் சாஸ்திரத்தையும் ஈஸ்வரனையும் நான் பூஜிக்க வேண்டும். அதில் வேறு எந்த விதமான பேச்சுக்கும் இடமே இல்லை.

அப்படி இருக்கும்போது விஷயங்களை அனுசரித்து தர்மத்தை செய்வது என்பது நமக்கு வரக்கூடிய எண்ணம் அல்ல. தப்பிதமான காரியத்தைச் செய்துவிட்டு எனக்கு பாதகமில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீ சொன்னால், நீ நினைத்தால் போச்துமா? உனக்கு தண்டனை கொடுப்பவன் இறைவன். அவன் நினைக்க வேண்டும் ஒரு நாள் இந்த சரீரத்தை விட்டு போன பின்பு உனக்கு தண்டனை கொடுப்பதற்கு ஒருவன் இருக்கிறான். நீ செய்தது ஒன்றும் பாதகமில்லை என்று அவன் நினைக்க வேண்டும்.
நீ இந்த மாதிரி இருந்தால் அவனை நினைக்க போவது இல்லை அதனால்தான் என்றைக்குமே அதர்ம விஷயம் பக்கம் போகக்கூடாது என்று இருக்க வேண்டுமே தவிர அதிலேயும் அந்த சமயத்தில் எப்படி இருக்கிறேன் இந்த சமயத்தில் இப்படி இருக்கிறேன் என்ற மனோபாவம் இருக்கக் கூடாது.
சிலருக்கு இன்னொரு சந்தேகமும் எனக்கு சந்தியாவந்தனம் பண்ண வேண்டும் என்று இருக்கிறது ஆனால் நண்பர்கள் யாரும் பண்ணுவதில்லை நான் ஒருவன் மட்டும் பண்ணி என்ன பிரயோஜனம்?
நண்பர்கள் செய்கிறார்கள் என்பது உனக்கு தேவை இல்லை இது உன்னுடைய கர்மா அனுஷ்டானம். உன்னுடைய நண்பர்களுக்கு சக்கரை வியாதி இருக்கிறது என்றால் நீ சர்க்கரை சேர்க்காமல் இருக்கிறாயா? அவனுக்க்கு சர்க்கரை நோய் இருந்தாலென்ன என்று அதிம் மட்டும் வைத்துக்கொண்டு சந்தியாவந்தன விஷயத்துக்கு வரும்பொழுது நண்பர்கள் யாரும் பண்ணுவதில்லை நான் எதற்கு பண்ண வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இன்னொருவனை எந்த விஷயத்தில் தொடர வேண்டும் என்று சொன்னால் நல்ல விஷயத்தில் ஃபாலோ செய்ய வேண்டும். உன் நண்பனுக்கு சாயங்காலம் கோவிலுக்கு போய் தரிசனம் பண்ணி விட்டு வர வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது நீ அதனை பார்த்த அதே பழக்கம் பண்ணிக்கொண்டேன் என்று சொல் பரம சந்தோஷம். ஆனால் இன்றுவரை கோயிலுக்குப் போகிற நீ இன்னொரு சினேகன் சாயங்காலம் ஆனதும் சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லி நானும் மாறி விட்டேன் என்றால் ரொம்ப தவறு.
நமக்கு அனுசரணம் என்பது நல்ல விஷயத்தில் இருக்க வேண்டுமே தவிர தவறான விஷயத்தில் இருக்கக்கூடாது. தர்ம விஷயத்திலே பரிசுக்கு ஏற்றமாதிரி செய்கிறேன் என்று சொல்ல கூடாது சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஜனங்களின் சௌகரியங்களையும் குணங்களையும் அனுசரித்து செய்யாமல் நம்முடையதை நாம் தர்மத்தை அனுசரித்து செய்ய வேண்டும் எப்போதும் நாம் தர்மத்தை விடக்கூடாது எல்லோரையும் போல் நானும் இருக்கிறேன் என்று சொன்னால் அது முடியாது.
எந்த பரிஸ்சிதியிலும் சந்தியாவந்தனம் செய்யாமல் சாப்பிட மாட்டேன் என்று நியமத்தை வைத்துக்கொண்டால் அது நன்மை பயக்கும் எனக்கு சமயம் ஏற்படவில்லை எனக்கு படிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது ஆனால் சொல்லிக் கொடுப்பவர்கள் இல்லை நேரம் கிடைப்பதில்லை என்றெல்லாம் காரணம் சொல்வது சரியல்ல.

எப்படி வேத அத்யயனம் செய்யாமல் போனால் பிரம்மம் என்று சொல்வது சரியில்லையோ அது போல இல்லாமல் போனால் இந்த மார்க்கத்தில் நமக்கு விருப்பம் இல்லை என்று தான் அர்த்தம்.
பக்தியும் இல்லை பயமும் இல்லை இந்த காரியத்தை செய்யாமல் போனால் பின்பு நான் நரகத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற பயம் வேண்டும் நான் பிராமணனாக பிறந்ததால் இதைப் படிக்க இதை செய்ய வேண்டும் என்ற அத்தியாவசியமான காரணம் என்கிற ஒரு பக்தி வேண்டும் இது நமக்கு ரொம்ப அவசியம்
ரொம்ப பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறாய் ஆனால் காரியத்தை காண்பிப்பது உன்னுடைய பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கிறது பேசுவது பெரிய பெரிய தர்மங்களை பேசுகிறாய் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறது அதேபோல் நாமும் ஈஸ்வரன் இருக்கிறான் தர்மம் செய்ய வேண்டும் என்று பேசுவதோடு சரி ஆனால் பரலோகம் ஜென்மாந்திர இருக்கிறது என்று விசுவாசம் இருந்தால் தர்மத்தை விட்டு விலகி இருப்போமா? வேத அத்யயனம் பண்ண முடியவில்லை நமக்கு திரிகரணசுத்தி இல்லை அதர்மத்தில் விசுவாசம் இருக்கிறது என்ற பட்சத்தில் ஒன்றும் செய்ய முடியாது
நாம் குறைந்தபட்சம் சந்தியாவந்தனமாவது செய்ய வேண்டும் நமது வர்ணாஸ்சிரம தர்மத்தை நித்யகர்மானுஷ்டானத்தை கடைப்பிடித்து அந்த இறைவனுடைய ப்ரிதிக்கு பாத்திரமாகுங்கள் என்று ஆசிர்வதிக்கிறோம்.