பக்தருக்கென இறைவன் செய்யும் லீலை! ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar

ஒரு சமயம் விடாமல் பெய்த அடை மழையால் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அதனால் அதன் கரைகளில் கட்டப்பட்டிருந்த அணைகளில் பெரும் பிளவு உண்டாயிற்று.

ஆற்று நீர் ஊருக்குள் புகுந்தது தடுத்து நிறுத்த முடிவு செய்த அந்நாட்டு அரசன் எல்லா பொது மக்களையும் அழைத்து பிளவு ஏற்பட்ட பகுதியை மணலைக் கொண்டு அடைக்குமாறு கட்டளையிட்டான் அரசன்.

அளவில் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அவற்றை இயக்கும் பொறுப்பை ஊர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான் அவ்வூர் மக்களுள் வயதான ஏழை பெண்மணி இருந்தாள் அவள் பிட்டு எனும் ஒருவகை தின்பண்டத்தை தயாரித்து விற்று ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள்.

பலவீனமாக இருந்தததால் கடினமான காரியங்களை செய்ய முடியவில்லை அரச கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது என கவலைப்பட்டாள்

சிவபெருமான் ஒரு லீலை புரிய நினைத்தார் ஒரு கூலிக்காரனை போல வேடமணிந்து முதாட்டியிடம் சென்றார் அனைவரும் சென்று நதிக்கரையில் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் இங்கு படுத்துக் கொண்டிருக்கிறாயே

அரசன் கொடுத்த வேலையை செய்வதற்கு உனக்கு இஷ்டம் இல்லையா என்று தெரியாதது போல் கேட்டார் அவள் வருத்தத்துடன் என்ன செய்வது எனக்கு வயதாகிவிட்டதால் அவ்வளவு கடினமான வேலையை என்னால் செய்ய முடியாது மேலும் நான் அந்த வேலையை செய்யப் போனால் பிட்டு வியாபாரம் நின்றுவிடும் நான் பட்டினியாய் இருக்க வேண்டியதுதான். அது அரச கட்டளையை ஏற்கவும் முடியாமல் வேலையும் செய்ய முடியாமல் உள்ளேன் என்னால் எப்படி மீள முடியும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறேன் என்று கூறினாள்

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

பக்தர்களின் கஷ்டங்களை உடனே தீர்த்து வைக்கும் இறைவன் அவர்களுடைய கஷ்டத்தை கேட்டு கவலைப்படாதே உனக்காக ஒதுக்கப்பட்ட அந்த வேலையை நான் செய்து தருகிறேன் நீ எனக்கு என்ன கைமாறு செய்வாய் என்று கேட்டார் நீ செய்யும் இந்த வேலைக்கு என்னால் என்ன கொடுக்க முடியும் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.

என்னுடைய கஷ்டத்தை பார்த்தாயா என புலம்பினாள் இறைவன் அவளை பார்த்து சரி நான் உனக்காக சென்று அவ்வேலையை செய்கிறேன் நீ எனக்கு என்ன கூலி தருவாய் என கேட்கிறார் அதற்கு அவள் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை நான் என்ன தருவது எனக் கேட்டாள்.

நன்கு வேக விட்டு வைத்திருக்கிறாயே பிட்டு இவற்றை யார் உண்ணப் போகிறார்கள் எனவே நீ எனக்கு அதைக் கொடுத்தால் போதும் அதை கூலியாக ஏற்றுக்கொள்கிறேன் வேறு எதையும் தர வேண்டாம் என்று அங்கிருந்த எல்லா பிட்டுக்களையும் எடுத்து சாப்பிட்டார் மதிய நேரம் முடிந்தது.

இறைவன் வேலை ஏதும் செய்யாமல் வழிப்போக்கர்கள் இடம் வீண் வம்பு பேசிக் கொண்டே காலத்தை போக்கினார் எல்லோரும் தங்களுக்கு இட்ட வேலையை செய்து முடித்தார்கள் ஆனால் அந்த அணையின் ஒரு பகுதியிலிருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டிருந்தது அது அந்த மூதாட்டிக்கு ஒதுக்கப்பட்ட பகுதி செய்தி அரசின் காதுகளுக்கு எட்டியது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.30 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அரசன் அங்கு விரைந்து வந்தான் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து அந்தக் கூலியைக் கைகாட்டி அவனுடைய சோம்பேறித்தனத்தினால்தான் அப்பகுதி அடைக்கப்படாமல் இருக்கிறது என்று அரசனிடம் முறையிட்டார்கள்.

இதனால் கோபமுற்ற அரசன் ஒரு பிரம்பை எடுத்துக் கூலியின் முதுகிலே அடித்தான் அரசன் கூலியை அடித்த கணமே எல்லோருடைய முதுகிலும் அந்த அடி விழுந்தது தவறு செய்த அந்த கூலியை அடைக்காமல் அரசன் என்னை அடித்துவிட்டார் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் எண்ணி வியந்தார்கள். அடி அரசனுடைய முதுகிலும் விழுந்தது.

அரசன் தான் கொடுத்த தண்டனையை தானே அனுபவிக்க வேண்டியதாயிற்று. கூலியின் வடிவத்தில் வந்திருப்பவர் சாட்சாத் பரமசிவனே என்று உணர்ந்தான் அரசன்.

எல்லோருடைய உள்ளங்களிலும் இறைவன் வசிக்கிறார் என்னும் கருத்தை நமக்கு தெரிவிக்கிறது இந்த நிகழ்ச்சி இறைவன் உருவமற்றவன் பக்தர்களின் பொருட்டு பல வடிவங்களில் அவரால் எடுத்துக்கொள்ள முடியும்

அவருடைய நிலை மிக வினோதமானது மற்றும் ஆனந்தமானது. இந்நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு கவி இறைவா நீ பிட்டு சாப்பிடும் போது எங்கும் நிறைந்துள்ள உன்னுடைய சர்வ வியாபக தன்மையை காட்டாமல் அடிவாங்கும் போது மட்டும் காட்டினாயே என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.31 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இறைவன் பக்திக்காக இறங்கி வந்து வேலையும் செய்வான். உலகோருக்கு உணர்த்த பல லீலையும் செய்வான்.

Related articles

Recent articles

spot_img