December 8, 2025, 3:13 PM
28.2 C
Chennai

ஆத்மஞானம் அடைவதற்கு வேண்டிய தகுதி: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

சொர்க்க பதவியை அடைவதற்காக விஸ்வஜித் என்னும் யாகத்தை வாஜஸ்ரவசர் என்பவர் நிகழ்த்தினார்
அந்த யாகத்தை செய்பவர் தன்னிடமுள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்திட வேண்டும் என்பது நியதி.

அவருக்கு நசிகேதன் என்று ஒரு மகன் இருந்தான் தர்மத்தின் மறு உருவமாய் திகழ்ந்த அவன் தனது தந்தை புரோகிதர்களுக்கு அளிக்கும் மலடி கட்டிய எழுத்துக்களைப் பார்த்து திகைத்துப் போனார்.

தனது தந்தையின் வேள்வியில் ஏற்பட்ட குறையை ஈடுபடுவதற்கு மகன் என்ற முறையில் தான் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று எண்ணினார்.

தன்னையே தானமாக கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று அவன் முடிவெடுத்தான் தந்தையை அணுகி நீங்கள் என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டான் அவரோ அவனை சட்டை செய்யவில்லை மூன்றாவது முறையாக இதே கேள்வியைக் கேட்டதும் அவர் கோபமாக தன் மகனைப் பார்த்து உன்னை எமனுக்கு அளிக்கிறேன் என்று கூறினார்.

தந்தை ஒரு பேச்சுக்காக இத்தகைய வார்த்தைகளை கோபத்தில் கூறியிருந்தாலும் அவருக்கு களங்கம் அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தான். அவர் சொற்களை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தான்.

அச்சிறுவன் யம லோகத்தை சென்றடைந்தான் அங்கே எமன் இல்லாததால் பொறுமையாகவும் வாசலிலேயே காத்திருந்தான். வெளியில் சென்றிருந்த எமன் திரும்பி வந்ததும் மூன்று நாட்கள் காக்க வைத்த அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக அவனுக்கு மூன்று வரங்களை அளித்தார்.

மூன்றாவது வரமாக இறந்த பிறகு உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருருந்து வேறுபட்டு என்னவாகிறது. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதாக நசிகேதன் எமனிடம் கேட்டான்.

ஆத்மாவைப் பற்றி அறிவதற்கு முன் அதற்கு வேண்டிய தக்க மன உறுதியுடன் நசிகேதன் இருக்கிறானா என்று அவனை பரிட்சை செய்வதற்காக எமன் அவனை பல விதங்களில் ஆசை காட்டி மயக்கி பார்த்தார்.

அவனை நோக்கி பேசத் தொடங்கினார் நூறு வருடங்கள் வாழக்கூடிய புத்திரர்களையும் விரும்பிய அனைத்தையும், குதிரைகளையும் யானைகளையும் கேளு தருகிறேன் உன் விருப்பம் போல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

இவற்றுக்கு சமமான வேறு ஏதாவது கேட்க ஆசைப் பட்டாலும் கேட்டுக்கொள் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெரிய ராஜ்யத்திற்கு உன்னை அதிபதி ஆக்குகிறேன் எல்லா போகங்களையும் அனுபவிப்பதற்கு ஏற்ற வாறு உன்னைத் தயார் செய்கிறேன்.

அடைவதற்கான பொருட்களை விருப்பம்போல் கேட்டுக்கொள்வதோடு இசைக் கருவிகளோடு கூடிய தேவலோகத்து கன்னிகைகள் இங்கு இருக்கிறார்கள் அவர்களை எவராலும் அடைய முடியாது.

நீ விரும்பினால் அவர்களுடைய சேவையை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் உடல் நீங்கிய பின் அதனைடமிருந்து வேறுபட்ட ஆத்மா என்னவாகிறது என்ற கேள்வியைப் பற்றி விசாரிக்காதே என்றார்.

எமன் தன்னால் முடிந்த வரையில் எல்லாவித போகங்களையும் கொடுத்து அச்சிறுவனை மயக்கம் முயற்சித்தாலும் அமைதியான நதியைபோல் அவ்வாறு கேட்டதால் சிறிது மனக்கலக்கம் அடையாமல் உறுதியுடன் நின்றான். எமதர்மராஜனே உங்களால் இதுவரையில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் முடிவில் மறையக் கூடியவை அவை மனிதனுடைய இந்திர சக்தியை வீணாக்கி விடுகின்றன.

விதிவிலக்கின்றி இவை எல்லாமே ஒரு நாள் முடிவடைந்து போவதால் அற்ப ஆயுளைக் கொண்டதுதான். ஆகையால் அவைகள் தங்களது உடைமைகளாகவே இருக்கட்டும் என்று கூறினான்.

தான் கூறிய வரம் தான் தனக்கு வேண்டுமென்று அவன் வற்புறுத்தினான். நசிகேதன் உடைய மன உறுதியையும் வைராக்கியத்தின் கண்டு வியந்தவன் அவனுக்கு ஆத்ம வித்தையை எடுத்துரைத்தார் அதைக்கேட்டு அச்சிறுவன் ஞானியானான். அசைக்க முடியாத வைராக்கியத்தை பெற்றவனே ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி உள்ளவர் என்பதை கடோபஉபநிஷத்தில் வரும் கதை நன்கு வெளிப்படுத்துகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories