செங்கோட்டை சாரதா மடம்: ஆடிப்பூர வளைகாப்பு உற்ஸவம்!

Published:

sardha-5

ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அந்த பீடத்தின் கிளைகள் சிருங்கேரி சாரதா மடமாக உலகமெங்கும் செயல்பட்டு வருகிறது.

sardha

அவ்வகையில் செங்கோட்டை அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசிருங்கேரி சாரதா மடத்தில் அழகும் அருளுமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசாரதா அம்பாளுக்கு பல விதமான விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

saradha-1

அதனடிப்படையில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் சிறந்த முறையில் நடைப்பெற்றது. அம்பாளுக்கு விதவிதமான வண்ணமயமான வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

saradha-3

சிறப்பு தீபாராதனை காலை 9.30  மணியளவில் நடைப்பெற்றது. கொரோனா காலத்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

saradha-4

இவ்வைபவம் குறையின்றி நடைபெற (சம்பிரதாயம்) கோவிலுக்குள் நடத்தப்பட்டது. மடத்தின் தர்மாதிகாரி திரு இராமன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அம்பாளுக்கு வளையல் அலங்காரத்தினை அர்ச்சகர் ரவி செய்திருந்தார்.

saradha-3-1

Related articles

Recent articles

spot_img